இந்தியாவில் அதிகரிக்கும் புதிய வகை கொரோனா!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தோற்று பரவல் முழுமையாக குறையாத நிலையில், இந்தியா சர்வதேச பயணிகளுக்கான கட்டுப்பாடு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை நடப்பிலும் பின்பற்றி வருகிறது.
விமான நிலையங்களில் தெர்மல் ஸ்கெனிங் மூலம் வெப்பப் பரிசோதனை, ஆர்.டி.பி.சி.ஆர் சோதனைக் கட்டாயம் உள்ளிட்டவைகள் பின்பற்றப்பட்டு வருகிறது.
இருப்பினும், சமீப காலங்களாக உருமாற்றம் பெற்ற கொரோனா பரவல் பல நாடுகளில் அதிகரித்து வருகிறது. லண்டன், தென் ஆப்பிரிக்கா, பிரேசில் உள்ளிட்ட 15 நாடுகளில் உருமாற்றம் பெற்ற கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
உருமாற்றம் பெற்ற கொரோனா இந்தியாவில் பரவாமல் தடுக்க மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகமும் மற்றும் மத்திய சுகாதார அமைச்சகமும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே, புதிய வகை கொரோனா அதிகம் பரவியுள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளைத் தீவிரமாகக் கண்காணிக்க மத்திய சுகாதாரத்துறை முடிவெடுத்துள்ளது. அதற்காக சில நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
அதில், “இந்தியாவுக்குள் வரும் அனைத்து சர்வதேச பயணிகளுக்கும் ஒரே மாதிரியான கட்டுப்பாடுகள்.
ஐக்கிய அரபு அமீரகம், ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பு.
மேற்கண்ட நாடுகளில் இருந்து வரும் சர்வதேச விமான இயக்கம் ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் இயக்கப்படும்.
இந்த புதிய நடைமுறைகள் இம்மாதம் 22-ம் நள்ளிரவு 12.00 மணி வரை அமலில் இருக்கும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
18.02.2021 01 : 53 P.M