தர்மமே மாறுபட்டால் என்ன செய்வது?

நினைவில் நிற்கும் வரிகள் : 

***

காற்றினிலே பெரும் காற்றினிலே
ஏற்றி வைத்த தீபத்திலும் இருளிருக்கும்
காலம் எனும் கடலிலே சொர்க்கமும் நரகமும்
அக்கரையோ இக்கரையோ?
                                 (காற்றினிலே….)

ஆண்டவனும் கோவிலில் தூங்கிவிடும்போது
யாரிடத்தில் கேள்வி கேட்பது?
ஏழைகளின் ஆசையும், கோவில் மணி ஓசையும்
வேறுபட்டால் என்ன செய்வது?
                                 (காற்றினிலே….)

ஆடுவது நாடகம்.. ஆளுக்கொரு பாத்திரம்
இறைவனுக்கு வேஷம் என்னவோ?
ஆடவைத்துப் பாடுவான்.. மூடுதிரை போடுவான்
மேடை அவன் மேடை அல்லவா?
வாழ்க்கையின் பாதை அவன் பாதை அல்லவோ?
                                 (காற்றினிலே….)

  • 1969-ல் வெளிவந்த ‘துலாபாரம்’ திரைப்படதத்தில் இசையமைப்பாளர் தேவராஜன் இசையில், கவிஞர் கண்ணதாசனின் வரிகள்.

15.02.2021 01 : 22 P.M

You might also like