“நீங்கள் நேசித்தவற்றைச் செய்யுங்கள்”
உலகப் புகழ்பெற்ற அமெரிக்கத் தொழிலதிபரான வாரன் பபேட், பிரபல Berkshire Hathaway நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. அவரது நம்பிக்கை மொழிகள்…
உங்களிடம் முதலீடு செய்வதுதான் மிகச்சிறந்தது. நீங்கள் எதைச் செய்தாலும் அது உங்களுடைய திறமையை மேம்படுத்தும். கல்வியோ பயிற்சியோ பெறும்போது உங்களது திறனை அது வளர்க்கிறது. புதிய விஷயம் ஒன்றைச் செய்வதாக இருக்கட்டும் அல்லது புதிய நிறுவனத்தைத் தொடங்குவதாக இருக்கட்டும்.
பழக்கங்கள் நம்மை உருவாக்கும் அல்லது சிதைக்கும். சுயத்தையே அழிக்கும் நடத்தை முறைகளைக் கொண்ட மனிதர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் கெட்டப் பழக்கங்களில் சிக்கியிருக்கிறார்கள். அந்தப் பழக்கம் உங்களை அழிப்பதற்கு முன் அதிலிருந்து வெளியேறிவிட வேண்டும்.
நீங்கள் எல்லாவற்றிலும் நிபுணராக இருக்க முடியாது. ஆனால் உங்களுக்கு என்ன தெரியும், என்ன தெரியாது என்பது பற்றிய தெளிவு முக்கியமானது.
உங்களுக்கு முக்கியமான சில விஷயங்களுக்காக ரிஸ்க் எடுப்பீர்கள். அதுவே முக்கியமற்றதாகவும் இருக்கும்.
நீங்கள் நேசிக்கும் வேலையைவிட நல்ல ஊதியமும், உங்கள் பயோடேட்டாவில் மதிப்பைத் தருவதாக இருக்கும் வேலையே சிறந்தது.
உங்களைவிடச் சிறந்த குணம் படைத்தவர்கள் இருந்தால், அவர்களை உங்கள் கூட்டாளியாகத் தேர்ந்தெடுங்கள். அவர்களின் பக்கம் உங்கள் கவனத்தைத் திருப்புங்கள்.
நீங்கள் செய்து கொண்டிருக்கும் காரியங்களைப் பயத்தினால் நிறுத்தி விடாதீர்கள். குறிப்பாக, ஒன்றை நீங்கள் செய்தாலே அது வெற்றிகரமாக இருக்க வேண்டும்.
உங்கள் நேரம் மதிப்புமிக்கது. அதன்படி அதை பயன்படுத்துங்கள். ஒவ்வொருவருடைய நாளும் 24 மணிநேரம் மட்டுமே. தேவையற்ற நிகழ்வுகளால் அதை நிரப்பாதீர்கள்.
ஒரு நல்ல வாய்ப்பு வரும்போது அதை இரண்டு கைகளாலும் அரவணைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் பல காரியங்களைச் செய்யாதீர்கள். ஏதாவது செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்போது அது சரியானதாக, பெரிதாக இருக்கும்போது அதைச் செய்யுங்கள். உண்மையில் வாய்ப்புகள் வரும்போது பயன்படுத்துங்கள். ஏனெனில் 500 மிகச்சிறந்த வாய்ப்புகளைப் பெற்றுவிடப்போவதில்லை.
நான் செல்வந்தனாக ஆகப்போவது எப்போதும் எனக்குத் தெரியும். அதுபற்றி ஒரு நிமிடம்கூட சந்தேகம் கொண்டதில்லை.
ஏறக்குறைய எல்லா நாட்களும் யோசிப்பதற்காக நேரம் ஒதுக்குங்கள். கொஞ்ச நேரம் உட்கார்ந்து சிந்தித்துப் பாருங்கள். நான் படிக்கிறேன், சிந்திக்கிறேன். அதனால்தான் மற்ற தொழிலதிபர்களைவிடக் குறைவாகவே உடனடி முடிவுகளை எடுக்கிறேன்.
நீங்கள் யாருடன் ஒப்பந்தம் செய்கிறீர்கள் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு நல்ல ஒப்பந்தத்தை ஒரு மோசமான நபருடன் போடக்கூடாது.
ஒரு நம்பிக்கையைப் பெறுவதற்கு 20 ஆண்டுகள் ஆகும். ஆனால் அதனை அழிக்க 5 நிமிடங்கள் போதும். நீங்கள் அதைப் பற்றி யோசித்தால் மாறுபட்ட விஷயங்களை செய்வீர்கள்.
முதலீடு தொடர்பாக இரண்டு விதிகள். எப்போதும் பணத்தை இழந்து விடாதீர்கள். முதல் விதியை மறந்துவிடாதீர்கள்.
ரிஸ்க் என்பது தெரிந்துகொள்வதில்ல்லை. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதில் இருக்கிறது.
சிலர் நிழலில் அமர்ந்திருப்பார்கள். ஏனெனில் சிலர் பல ஆண்டுகளுக்கு முன்பு மரம் நட்டிருப்பார்கள்.
வெற்றிபெற்ற மனிதர்களுக்கும் உண்மையிலேயே வெற்றிபெற்ற மனிதர்களுக்கும் வேறுபாடு உள்ளது. உண்மையிலேயே வெற்றியடைந்த மனிதர்கள் பெரும்பாலும் எல்லாவற்றுக்கும் நோ சொல்லியிருப்பார்கள்.
தொழில் உலகத்தில் மிகப்பெரும் வெற்றிகளைத் தொட்ட மனிதர்கள், அவர்கள் நேசித்தவற்றை செய்தவர்களாக இருப்பார்கள்.
- தான்யா
12.02.2021 01 : 30 P.M