பல் உள்ளவன் பக்கோடா சாப்பிடுகிறான்!

தி.மு.க. பொதுச்செயலாளரான துரைமுருகன் பொதுவாகவே கேலியும், கிண்டலுமாகப் பேசக்கூடியவர். சட்டமன்றத்தில் கூட அவருடைய  நாசூக்கான கேலி பிரசித்தம்.

சமீபத்தில் காட்பாடியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில்,  தி.மு.க.வின் வாரிசு அரசியலைப் பற்றி செய்தியாளர்கள் கேட்டதும், அவர் சொன்ன பதிலும் அதே ரகம் தான்.

“வாரிசு அரசியல் என்று பேசுகிறார்கள். பல் உள்ளவன் பக்கோடா சாப்பிடுகிறான்” என்று ‘ரைம்மிங்’கோடு பேசியவர் தொடர்ந்து “வாரிசு அரசியல் என்று சொன்னால் இவர்கள் ஏன் வேதனை அடைகிறார்கள்?  மு.க.ஸ்டாலின் படிப்படியாக வளர்ந்து தான் இந்த நிலைக்கு வந்துள்ளார்” என்றிருக்கிறார்.

உதாரணங்களை இதற்கு முன் துரைமுருகன் சொல்லியிருந்தாலும், இப்போது சொல்லியிருக்கிற “பக்கோடா” உதாரணம் ஸ்பெஷல் ரகம்!

11.02.2021 03 : 50 P.M

You might also like