டிரெண்டுக்கு மாறுவோம்…!

சணல் துணி மூலம் தயாரிக்கப்படும் கோணி பைகள் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், கலை நயத்துடன் அழகாகவும் வடிவமைக்கப்படுகிறது.

இதனை பலர் விரும்பி வாங்குவதால், சணல் பொருள் தயாரிப்பு (Jute Bags) முறையை கற்றுக் கொண்டால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம்.

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத இந்த சணல் பொருள் தயாரிப்பு  மாவட்ட நிர்வாகமும், மத்திய ஜவுளித் துறையும் உதவி புரிவதோடு,  இந்தக் கண்காட்சிக்கு இலவசமாக இடம் அளிக்கின்றனர்.

தென்னை, வாழை நார் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களின் தரத்தை விட, தனித்துவம் வாய்ந்தது என்பதே இந்தத் திட்டத்தின் தனிச்சிறப்பு.

பெண்கள் வீட்டில் இருந்தபடி இந்தத் தொழிலை செய்யலாம். சணல் பொருட்கள் அனைத்தும் சந்தையிலும் கிடைக்கிறது.

விற்பனையில் அதிக லாபம் பெறலாம். சணல் பொருள் தயாரிப்பு முறையை பொறுத்தவரை, சணல் பை தயாரிப்பு பயிற்சி தெரிந்தவர்கள் மற்றும் தையல் தெரிந்தவர்கள் ஒரு வாரத்திலும், தையல் தெரியாதவர்கள் 15 நாளிலும் கற்று கொள்ளலாம்.

சணல் துணியை கொண்டு 35 வகையான பொருட்களை உற்பத்தி செய்யலாம். இதனை தயாரிக்க செலவாக நாள் ஒன்றுக்கு 1000 ரூபாய் வீதம், 25 நாட்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும் இதர செலவாக 5 ஆயிரம் ரூபாய் என மாத உற்பத்திக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை தேவைப்படும். இந்த சணல் பை பொருட்களை சில்லரையாகவும், மொத்தமாகவும் 75% லாபத்தில் விற்கலாம்.

இதன் மூலம் வருவாய் 43,000 ரூபாய் என லாபம் 18,000 ரூபாய் வரையிலும் பெறலாம்.

மேலும் விற்பனை அதிகரித்தால், அதற்கேற்ப உற்பத்தி மேற்கொண்டால் கூடுதல் லாபமும் பெறலாம்.

வீட்டில் ஏற்கனவே தையல் மெஷின், டேபிள் போன்றவை இருந்தால் முதலீட்டுக்கு ரூ.10,000/-போதுமானது.

திருமண வீட்டில் விருந்தினர்களுக்கு வழங்கும் தாம்பூல பை உள்ளிட்ட பல ஆர்டர்களைப் பெற்று, பேன்சி கடைகள் மற்றும் சிறப்பு வாய்ந்த ஹேண்ட் பேக் கடைகளுக்கு சப்ளை செய்தும் பெண்கள்  அதிக லாபம் ஈட்டலாம்.

சணல் துணி கொல்கத்தாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. அங்கு மொத்தமாக கொள்முதல் செய்யலாம். மிகக் குறைந்த விலையில் இந்தப் பொருட்கள் கிடைக்கிறது.

இதுதவிர சென்னை, புதுவையில் கிடைக்கும். காட்டன் ரோப் ஈரோடு மாவட்டம் குமாரபாளையம், பவானி ஆகிய இடங்களில் கிடைக்கிறது. மற்ற பொருட்கள் அனைத்து ஊர்களிலும் கிடைக்கிறது.

இந்த சிறுதொழில் மூலம் பெண்கள் அதிக பயனடையலாம்.

09.02.2021 12 : 10 P.M

You might also like