மனிதரில் பல வகையுண்டு அவர் வாக்கினில் தெரியும் யாரென்று!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
கல்லாய் வந்தவன் கடவுளம்மா
அதில் கனியாய்க் கனிஞ்சவ தேவியம்மா
புல்லாய் மொளைச்சவ சக்தியம்மா
அதில் பூவாய் மலர்ந்தவ காளியம்மா
(கல்லாய்…)
மந்தையில் மேய்கிற வெள்ளாடு
அந்தி சந்தைக்கு வந்தால் சாப்பாடு
பந்திக்கு முந்துற பெரும்பாடு
அது படிச்சவன் வகுத்த பண்பாடு
(கல்லாய்…)
ஆண்டியின் கையில் திருவோடு
தினம் அவனுக்கு வேலை தெருவோடு
இருப்பவன் சண்டை பொருளோடு
இந்த ஏழையின் சண்டை வயிறோடு
(கல்லாய்…)
காக்காய் உண்டு நரியுண்டு
வரிக்கழுதைகள் உண்டு புலியுண்டு
மனிதரில் இத்தனை வகையுண்டு
அவர் வாக்கினில் தெரியும் யாரென்று
(கல்லாய்…)
– 1966- ம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த ‘மகாகவி காளிதாஸ்’ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.
04.02.2021 12 : 53 P.M