“படியுங்கள்… படியுங்கள்” – லெனின்
ரஷ்யப் புரட்சி நடைபெற்று லெனின் தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு மாணவர்கள் மற்றும் மக்கள் மத்தியில் லெனின் உரையாற்றினார்.
அவர் பேசும் பேசும்போது, “மாணவர்களே நீங்கள் மூன்று விசயங்கள் செய்ய வேண்டும்” என்று கூறினார்.
ஒரு மாணவர் எழுந்து, “முதலில் என்ன செய்ய வேண்டும்” என்று கேட்டார்.
லெனின் “படியுங்கள்” என்றார்.
அடுத்து ஒரு மாணவி எழுந்து, “இரண்டாவது என்ன செய்ய வேண்டும்” எனக் கேட்டார்.
லெனின் “படியுங்கள்” என்றார்.
இறுதியாக ஒரு முதியவர் எழுந்து, “நங்கள் என்ன செய்ய வேண்டும்” என்று கேட்டார்.
அதற்கும் லெனின் “படியுங்கள்” என்றார்.
நிறைவாக தீர்க்கமாகப் பேசிய லெனின், “படியுங்கள்… இன்று புத்தகத்தின் முன்பு நீங்கள் தலையைக் குனிந்தால், அமெரிக்கா ஏகாதிபத்தியம் மட்டுமல்ல உலகமே உங்கள் முன்பு தலைக் குனியும்” என்றார்.
நன்றி: திண்டுக்கல் கணேசன் முகநூல் பதிவு
31.01.2021 12 : 30 P.M