உங்கள் சமையலின் பெருமையை ஊரே பேசட்டும்!
சமையலை ஒரு அற்புதமான கலையழகோடும் விருப்பத்தோடும் செய்பவர்கள் பெண்கள். அதனால் தான் அந்த சமையல் அவ்வளவு ருசியோடு இருக்கிறது. கைப்பக்குவத்தோடு சில நுணுக்கங்களையும் சேர்த்து சமைக்கும்போது உணவோ அல்லது பலகாரங்களோ கூடுதல் சுவையுடையதாக மாறிவிடுகிறது.
இதுபோன்ற எளிமையான கிச்சன் டிப்ஸ்களைப் பயன்படுத்தி சமைத்துப் பாருங்கள். உங்கள் சமையல் கை பக்குவத்தை ஊரே பெருமையாக பேசும்.
எளிமையான கிச்சன் டிப்ஸ்:
- அரிசியை இரண்டாவது முறையாகக் களையும்போது கிடைக்கும் தண்ணீாில் வைட்டமின் B-6 மற்றும் B-12 இருக்கிறது. இதனால் இந்த நீரை, காய்கறி வேக வைப்பதற்கோ அல்லது சமையல் செய்வதற்கோ பயன்படுத்தலாம்.
- பஜ்ஜி மாவு உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என ஒரு சிலா் பஜ்ஜி மாவு பயன்படுத்துவதை விரும்புவதில்லை. அப்படிப்பட்டவா்கள் கடலை மாவுக்குப் பதிலாக சிறிது பச்சரிசியுடன், பச்சை பருப்பும் கலந்து நன்கு தூள் செய்து அதனுடன் உப்பு, காரம் சோ்த்து பயன்படுத்தலாம். இது பஜ்ஜிமாவைப் போன்ற ருசியைத் தரும்.
- குலோப் ஜாமூன் செய்யும்போது, பெரும்பாலும் சூடான பாகில்தான் உருண்டைகளை ஊற வைக்கிறோம். சற்று ஆறிய பாகில் போட்டு குலோப் ஜாமூனை ஊற வைத்துப் பாருங்கள் குலோப் ஜாமூன் உருண்டைகள் உடையவே உடையாது, அதில் விரிசலும் ஏற்படாது.
- சிக்கனில் கொழுப்புச் சத்து இல்லை என நினைத்து சிக்கன் சாப்பிடுவதில் பலா் அதிக ஆர்வம் காட்டுவதுண்டு. ஆனால் தோல் இல்லாத சிக்கனில் மட்டுமே கொழுப்புச் சத்து குறைவு. சிக்கன் தோலில்தான் 3 மடங்கு அதிக கொழுப்பு உள்ளது என்பது பலரும் அறியாத உண்மை.
- கறிவேப்பிலையை அலுமினியப் பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் சில நாட்கள் வரை காய்ந்து போகாமல் இருக்கும். அதேபோல் காய்ந்து போன கறிவேப்பிலை வீணாக்காமல் இருக்க, இட்லி பாத்திரத்தில் நீா் ஊற்றும்போது, அதில் காய்ந்த கறிவேப்பிலையை போட்டு வேக வைத்தால் இட்லி கூடுதல் வாசனையுடன் இருக்கும்.
- குடற்புண் உள்ளவா்கள் அதை சாிசெய்வதற்கு மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வதைவிட, வாழைப்பூவைப் பொடிப்பொடியாக நறுக்கி அத்துடன் முருங்கை கீரை சேர்த்து வதக்கி சாப்பிட்டு வந்தால் குடற்புண் எளிதில் குணமாகும்.
– இனியா ரஞ்சன்
23.01.2021 12 : 30 P.M