அதிசயம் பார்த்தேன் மண்ணிலே…!

நினைவில் நிற்கும் வரிகள்:

***

தஞ்சமென்று வந்தவரைத் தாய்போல ஆதரித்து
வஞ்சகரின் செயல்களுக்கு
வாள் முனையில் தீர்ப்பளித்து
அஞ்சாத நெஞ்சில் அன்புக்கு இடம் கொடுத்து
அறங்காக்கும் மக்களிடம்
பார்த்த விந்தையைச் சொல்லட்டுமா?

அதிசயம் பார்த்தேன் மண்ணிலே
அது அப்படியே நிக்குது எங்கண்ணிலே
மூணுபக்கமும் கடல் தாலாட்டுது
தன்மானமுள்ள மக்களைப் பாராட்டுது
வானுயரும் மலையில் அருவி பெருகியே
வந்துவந்து நிலத்தை நீராட்டுது
பல வளம்பெருகி மறவர் பேர்நாட்டுது
                                                              (அதிசயம்…)

மலையைச் செதுக்கி வச்ச சிலையிருக்கு
அதில் மனங்கவரும் அழகுக் கலையிருக்கு
மானிருக்கு வண்ண மயிலிருக்குச்
செந்தேனிருக்கு வீரச் செயலிருக்கு
                                                              (அதிசயம்…)

அங்கே – சந்தன மரக்கிளையும் தமிழ்க் கடலும்
தழுவி சந்தமிசைத்துத் தென்றல் தவழ்ந்து வரும்
செந்தாழை மலர்தொட்டு

மணம் சுமந்து வரும்
இங்கே – தங்கிட நிழலுமில்லை
பொங்கிடக் கடலுமில்லை
சற்று நேரங்கூட வெயில் மறைவதில்லை
நம்மை தழுவிடத் தென்றலேதும் வருவதில்லை.

-1963 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்த ‘கலை அரசி’ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்.

23.01.2021 12 : 15 P.M

You might also like