பழைய சோறு + நேத்து வைச்ச மீன் வேணுமா?

சென்னையில் அடையாறுக்குப் போகிற சாலையில், பெசன்ட் நகருக்குப் போகிற சிக்னலுக்கு முன்னால், இடதுபுறத்தில் இருக்கிறது இந்த நான்வெஜ் மெஸ்.

உள்ளே போனால் மதுரைப் பக்கத்து வாசனையுடன் மெனு.

“பழைய சோறு, நேத்து வைச்ச மீன், சின்ன வெங்காயம், பச்ச மிளகாய்’’ – இப்படி ஒரு வித்தியாசமான மெனு.

விலை 124 ரூபாய். மட்டன் சுக்கா, இறால், ஈரல் மசாலா, நல்லி எலும்பு, மூளை ஃப்ரை என்று ஏகப்பட்ட ஐட்டங்கள்.

ஆனால் மிதமான காரத்தோடு சாப்பிடும்போது தனிருசி.

இன்னும் பிச்சிப்போட்ட நாட்டுகோழி, நண்டு வறுவலுடன் விதவிதமான பிரியாணிகளுடன் விரால்மீன் பிரியாணியும் வெரைட்டியாகக் கிடைக்கிறது. விலையும் சுமார் ரகம் தான்.

கொஞ்சம் மாறுதலாகச் சாப்பிடலாமே என்று நினைக்கிறவர்கள் இங்கு சாப்பிட்டுவிட்டு, அப்படியே சற்றுத் தூரத்தில் உள்ள பீச் பக்கம் போய் ஒரு நடை நடந்தால், சாப்பாடும் உள்ளே சிரமமில்லாமல் இறங்கி அரைக்கிறக்கத்துடன் நன்றாக கண்ணசரலாம்!

குரு மெஸ் முகவரி: 

T.N.H.B COMPLEX,
No-10, L.B Road,
Adyar, Chennai-600020
044-2440 4545

20.01.2021  05 : 05 P.M

You might also like