டாக்டர் க.பழனித்துரைக்கு விருது!

காந்தி கிராமப் பல்கலைக் கழகத்தில் உயர்பொறுப்பில் இருந்தவரும், பஞ்சாயத்து ராஜ் சட்டம் உருவான பின்னணியில் உழைத்து, வெகுமக்களிடம் எடுத்துச் சென்றவருமான டாக்டர். க.பழனிதுரைக்கு ஜஸ்டிஸ் வி.ஆர்.கிருஷ்ணய்யர் விருது மதுரையில் வரும் 23 ஆம் தேதி நடக்க இருக்கும் விழாவில் வழங்கப்பட இருக்கிறது. விருதை வழங்குபவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியான ஆர்.மகாதேவன்.

விருது பெறும் டாக்டர்.க.பழனித்துரை தொடர்ச்சியான பங்களிப்பின் மூலம் ‘தாய்’ இணையதள வாசகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர். ஜெர்மனியிலுள்ள பல்கலைக் கழகத்தில் வருகை தரும் பேராசிரியரான அவருக்கு ‘தாய்’ குழுமம்சார்பில் மனமார்ந்த வாழ்த்துகள்!

19.01.2021    12 : 30 P.M

You might also like