எதையும் நான் வற்புறுத்த மாட்டேன்!

அருமைநிழல்:

1986-ல் இலங்கைப் பிரச்சனை தொடர்பாக தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆருக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவரான பிரபாகரனுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் துவங்கியபோது கூடவே இருந்தவர் அமைச்சரான பண்ருட்டி ராமச்சந்திரன்.

அப்போது பிரபாகரன் சொல்வதை கூர்ந்து கவனித்த எம்.ஜி.ஆர். “இவர் சொல்கிறபடி பார்த்தால் மொத்த இலங்கையும் தமிழர்களுக்குத்தானே சொந்தம்? புலிகளுக்குத்தானே முழு இலங்கையும் கொடுக்கப்பட வேண்டும்.

இதில் இந்தியாவின் யோசனையை நீங்கள் ஏற்க முடியாது என்று கருதினால் ஏற்க வேண்டாம். நானும் வற்புறுத்த மாட்டேன்” என்று தமிழர்களின் வலி அறிந்து அன்றே சொன்னவர் புரட்சித் தலைவரான எம்.ஜி.ஆர்.

13.01.2021 12 : 59 P.M

You might also like