வாழ்க்கையின் சாலை மிக நீளமானது!

மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த தொழிலதிபரான கார்லோஸ் சிலிம், உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரர்களில் முதன்மையானவர். லத்தீன் அமெரிக்க நாடுகளில் தொலைத்தொடர்புத் துறையில் கொடிகட்டிப் பறக்கும் அவரது நம்பிக்கை மொழிகள் சில.

***

உங்கள் குழந்தைகளுக்கு ஒரு சிறந்த நாட்டைக் கொடுக்க வேண்டியது முக்கியம். ஆனால் அதைவிட மிக முக்கியம் நல்ல குழந்தைகளை இந்த நாட்டிற்குக் கொடுக்கவேண்டும்.

வாழ்க்கையில் மிகப்பெரிய விஷயம் பொருட்கள் அல்ல.

நம்முடைய பிரச்சினைகளை நாம் எதிர்கொள்ளும்போது, அவை அகன்றுவிடும். எனவே, தோல்விகளில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அப்போது வெற்றி என்பது மௌனமாக ஊக்கத் தொகையாகக் கிடைக்கும்.

தவறுகள் எதார்த்தமானவை; மனிதர்களுக்கு இயல்பானவை. சிறிய தவறுகளைச் செய்யுங்கள். அதை ஏற்றுக் கொள்ளுங்கள். அதை சரிசெய்யுங்கள். அதை மறந்துவிடுங்கள்.

நீங்கள் தொழிலில் இருந்தால், சுற்றுச்சூழலைப் புரிந்துகொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. எதிர்காலத்தைப் பற்றிய பார்வையும் தேவை. அதேபோல கடந்த காலத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

நீங்கள் கொடுக்கும்போது, உங்களுக்கு ஏதாவது கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். நீங்கள் ரோஜாவைக் கொடுக்கும்போது, அதன் மணம் உங்கள் கைகளில் ஒட்டியிருக்கும்.

நிகழ்காலத்தில் முழுமையாக அடர்த்தியாக வாழுங்கள். கடந்துபோன காலத்தை ஒரு சுமையாகச் சுமக்காதீர்கள். எதிர்காலம் ஊக்கமாகக் கிடைக்கும்.

எனக்கு அதிர்ஷ்டத்தில் நம்பிக்கையில்லை. நான் சந்தர்ப்பங்களை நம்புகிறேன். வேலையில் நம்பிக்கை வைத்திருக்கிறேன்.

உங்களுடைய போட்டியாளர் வென்றாலும்கூட, போட்டி உங்களிடம் சிறந்தவற்றை உருவாக்கும். எப்போதும், எப்போதும் சிறந்தவற்றையே உருவாக்கும்.

எல்லா தொழில்களிலும் தவறுகள் நேரும். அவை மிகப்பெரிய அளவில் நடக்காமல் ஒரு ட்ரிக் தடுத்துவிடும்.

எதையாவது செய்ய வேண்டும் என்று தீர்மானித்தால், அதை உடனடியாக செய்துவிடவேண்டும்.

ஒரு வேலையை முழுமையாகச் செய்து முடிப்பது என்பது உங்களுடைய மற்றும் சமூகத்தின் பொறுப்பு மட்டுமல்ல. அது உணர்ச்சியின் தேவையும்கூட.

வெற்றி என்பது ஒரு காரியத்தைச் சிறப்பாக செய்வதல்ல அல்லது மிகவும் சரியாகச் செய்வதல்ல அல்லது மற்றவர்களால் அங்கீகரிக்கப்படுவதல்ல. அது வெளியிலிருந்து கிடைக்கும் கருத்தல்ல, ஆனால் மாறாக உள்ளிருக்கும் மனநிலை.

காதல், குடும்பம், நட்பு, நம்பகத் தன்மை, நேர்மை போன்றவை அனைவருக்கும் தேவைப்படுபவை.

இவை உங்கள் ஆன்மாவுக்கும், உணர்வுகளுக்கும் இடையே நல்லிணக்கத்தை உருவாக்கும்.

வாழ்க்கையின் சாலை மிக நீளமானது. ஆனால் அது விரைவில் பயணிக்கக் கூடியது.

வாழ்க்கையில் எது மிகவும் மதிப்புமிக்கதோ, எந்த விலையும் இல்லாததோ ஆனால் அதுவே விலைமதிப்பற்றது.

நல்ல நேரத்தில் சிக்கனத்தைக் கடைப்பிடித்தால், மோசமான நேரங்களில் ஊதிய இழப்பைத் தவிர்க்கலாம்.

மற்றவர்களின் கருத்துகளுக்காக வாழ்ந்தால், நீங்கள் இறந்து விடுவீர்கள். நான் எப்படி ஞாபகத்தில் வைத்துக் கொள்ளப்படுவேன் என்பதற்காக வாழ விரும்பவில்லை.

-தான்யா

07.01.2021   11 : 15 A.M

You might also like