விகடன் இணையதள முடக்கத்திற்கு எதிர்ப்பு!

ஊர் சுற்றி குறிப்புகள்: சென்னை பிரஸ் கிளப்பில் விகடன் இணையதள முடக்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை கை, கால்கள் விலங்கிட்டு அமெரிக்க அரசு இந்தியாவிற்கு அனுப்பி வைத்ததைக் கண்டிக்கும் விதத்தில் ஒரு கார்ட்டூனை ஆனந்த விகடன் இணையதளம் வெளியிட்டிருந்தது. வெளியிட்ட சில மணி நேரங்களுக்குள் ஒட்டுமொத்த விகடன் இணையதளமே முடக்கப்பட்டது. முடக்கப்பட்ட மறுநாள், “ஏன் முடக்கக் கூடாது” […]

ஓருயிர் இன்னொரு உயிருக்குத் தரும் உச்சபட்ச மரியாதைதான் காதல்!

காதல் என்பது ஓர் உயிர் இன்னொரு உயிருக்குத் தருகிற உச்சபட்ச மரியாதை. அந்த மரியாதைக்கான காரணம் அழகு, அறிவு, திறமை ஆகியவற்றின் மீதான வியப்பாகவோ, பண்பு நலன்கள் மீதான ஈர்ப்பாகவோ, மறக்கவே முடியாத நன்றியுணர்வாகவோ இருக்கலாம். ஒரு கட்டத்தில் எல்லாவற்றையும் தாண்டி அது நம்மை நேசித்த உயிர்; நாம் சக உயிர்; என்கிற புரிதலுக்கு வருகிற போதுதான் காதல் நிஜமான மரியாதையைப் பெறுகிறது. ஆனால் எல்லோராலும் சுலபமாக இந்த இடத்திற்கு வந்து விட முடிவதில்லை. அதற்கு அவர்கள் […]

நம்மை நாம் காதலிக்கலாமா?!

’காதலர் தினம் கொண்டாட்டம்னு சொல்லிக்கிட்டு எங்க பார்த்தாலும் சோடி போட்டுகிட்டு திரியுதாங்க’ என்று அங்கலாய்ப்பவர்களும், அவர்களது பெருமூச்சுகளுக்கு இலக்கானவர்களும் ஒவ்வொரு ஆண்டும் பெருகிக்கொண்டே இருக்கின்றனர். காதலுக்காகக் காத்திருப்பவர்கள், காதல்களில் தங்களுக்கானது எது என்று கண்ணதாசன் சொன்ன வழியில் கண்டறிந்து பரிட்சித்து வருபவர்கள், காதலே மோசம் என்றிருப்பவர்கள், ‘காதல் அப்படின்னா..’ என்று வேற்றுக்கிரகங்களில் வாழத் தயாராகி வருபவர்கள் என்று பல வகைப்பட்டவர்கள் காதலர்களை விட ஆர்வமாகக் காதலர் தினத்தைத் தங்களுக்குப் பிடித்த வகையில் கடந்து செல்லும் துடிப்புடன் இருக்கின்றனர். […]

நூறாண்டு காலம் உலகை ஆட்சி செய்த ‘வானொலி’!

பிப்ரவரி – 13 : உலக வானொலி தினம் வானொலியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், கடந்த 2011ம் ஆண்டு, ஐ.நா-வின் துணை அமைப்பான யுனெஸ்கோ, பிப்ரவரி 13ம் தேதியை உலக வானொலி தினமாக அறிவித்தது. 2012ம் ஆண்டில் இருந்து ‘உலக வானொலி தினம்’ கொண்டாடப்படுகிறது. இன்று உள்ளங்கைக்குள் உலகம் வந்து விட்டது. உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் செய்திகளை கூட நொடிகளில் தெரிந்து கொள்கிறோம். அதிலும் ஏஐ தொழில்நுட்பம் இதை அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்று […]

வள்ளலார் காலத்தில் 12 பஞ்சங்கள்!

எங்கள் முருகன் பார்வதி பெற்ற பிள்ளை இல்லை. அவன் அவ்வையும் வள்ளலாரும் கிருபானந்த வாரியாரும் வளர்த்த பிள்ளை. நாங்கள் தைப் பூசத்துக்கு வள்ளலார் வழிநின்று முருகனை வணங்குவோம்.

நறுமுகையே… நறுமுகையே…!

பாம்பே ஜெயஸ்ரீயின் பெயரை ரசிகர்கள் உற்றுநோக்க வைத்த பாடலாக அமைந்தது, ‘இருவர்’ படத்தில் இடம்பெற்ற ‘நறுமுகையே.. நறுமுகையே..’ பாடல்.