மனதை அறிவியலின் எல்லைக்குள் கொண்டு வந்த ஃபிராய்ட்!
தத்துவவாதிகள், ஆன்மிகவாதிகள், உளவியலாளர்களின் கட்டுப்பாட்டிலிருந்த ‘மனம்’ என்கிற ஆழ்கடலை அறிவியல் மருத்துவத்தின் எல்லைக்குள் கொண்டுவந்த பெருமை ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த மனநல மருத்துவரான, நவீன மனநல மருத்துவத்தின் தந்தை சிக்மண்ட் பிராய்டையே (Sigmund Freud) சாரும். உள்மனம் (unconscious mind) பற்றிய கோட்பாடுகள், அடக்குதலுக்கு எதிரான பாதுகாப்பு நெறிமுறை, மனநல பாதிப்புகளைப் பாதிக்கப்பட்டவருடன் பேசியே குணப்படுத்தும் உளப்பகுப்பாய்வுச் சிகிச்சைமுறை போன்றவற்றை நிறுவியவர் அவர். பாலுணர்வு விருப்பு என்பதை மனித வாழ்வின் முதன்மையான உந்து ஆற்றல் என அழுத்தமாகப் […]
பத்திரிகைச் சுதந்திரம் வலுப்பெற வேண்டும்!
மே – 3 : உலக பத்திரிகை சுதந்திர நாள் (World Press Freedom Day). உலக பத்திரிகை சுதந்திர நாள் என்பது பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் ‘மனித உரிமைகள் சாசனம்’ பகுதி 19-ல் இடம் பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் அவையினால் சிறப்பு நாளாகப் பிரகடனப் படுத்தப்பட்டது. 1993-ம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஒவ்வோர் ஆண்டும் மே 3-ம் […]
விவேகமும் தைரியமும் வாழ்வை வழிநடத்தும்!
இன்றைய நச்: ஒழுக்கமும் தைரியமும் விவேகமும் உள்ளவர்களை இந்த உலகம் ஏமாற்ற முடியாது! – விவேகானந்தர்
சோதனையின்போது பலியாகும் கோடிக்கணக்கான உயிர்கள்!
பல்வேறு அற்புதங்களுடன் கூடிய இந்த உலகம் மனித குலத்துக்கு மட்டும் சொந்தமில்லை. ஈ, எறும்பு, பறவைகள், விலங்குகள் என அனைத்து உயிரினங்களுக்காகவும் படைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், மனிதர்களின் ஆதிக்கம் இவ்வுலகப் பரப்பில் நாளுக்குநாள் விரிவடைந்து வருகிறது. தாவரங்கள், வனங்கள், இயற்கை வளங்கள் அழிக்கப்படுகின்றன. விலங்குகள் வேட்டையாடப்படுகின்றன. மேலும் மருத்துவம் மட்டுமின்றி பல்வேறு வகையான ஆராய்ச்சிகளுக்கும் விலங்குகளைப் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக உலகளவில் பெரும்பாலான மருத்துவ ஆய்வுக் கூடங்களில், விலங்குகள் ஆய்வுக்காக பயன்படுத்தப்படுகின்றன. அப்போது மனிதர்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்தக்கூடிய இயந்திரக் […]
மனநல மருத்துவத்துறையில் மதமா?
மனநல மருத்துவத் துறையிலேயே மதம் வந்துவிட்டதே! என்று நான் கவலைப்படும்போது, கல்கி மாதிரி ஜிங்கென்று AI புரவி ஏறி, ஞானச் சுடரோடு ஓர் இளைய மனநல மருத்துவர் வந்தார்.
மனிதனை மாண்பாக்குவதே புத்தகங்களின் வேலை!
குறைந்தபட்சமாக ஆறு நிமிடங்கள் ஆழ்ந்து அமைதியாக ஒரு புத்தகத்தை வாசிக்கையில் ஒருவரது மன அழுத்தம் 68% வரை குறைவதாகச் சொல்கிறது பிரிட்டனில் உள்ள சசக்ஸ் பல்கலைக்கழகம் சார்பாக மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு.