எல்லோருக்குள்ளும் நிறைந்திருக்கும் காந்தி!
ஒரு கிராமத்தில் சில இளைஞர்கள் ஒன்று சேர்ந்து வாக்குக்கு பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும் என வாக்காளர்களை வேண்டுகின்றனர். மக்கள் செவி சாய்த்தனர், வாக்குக்கு பணம் வாங்கவில்லை, வாக்களித்தனர். மற்ற ஊர்களில் பணம் வாங்கி வாக்களித்தபோது நம் ஊரில் நாம் கேட்டுக் கொண்டதற்கிணங்க பணம் வாங்க மக்கள் மறுத்து விட்டனரே என்பது மக்களிடம் விண்ணப்பத்தை வைத்த இளைஞர்களை யோசிக்க வைத்தது. மக்களிடம் நல்லதைக் கொண்டு சேர்த்தால் மக்கள் அதை வாங்கத் தயாராக இருக்கின்றார்கள் என்பது அவர்களுக்குப் புரிந்தது. […]
பல தலைவர்களுடைய உருவம் தான் ‘விடுதலை’ப் படம்!
ஒடுக்குமுறையில் இருந்து தனது சமூகத்தை விடுவிக்க வேண்டும் என சிந்திப்பவர்களே போராளியாக மாறுகிறார்கள். இதைத் தான் உணர்த்துகிறது ‘விடுதலை’ படம்.
காட்டுத் தீ விழுங்கிய நகரம்: மீண்டெழும் முயற்சிகள் தீவிரம்!
லாஸ் ஏஞ்சல்ஸ் அதன் பிரகாசமான நகர விளக்குகள் மற்றும் பிஸியான தெருக்களுக்கு பிரபலமானது. இருப்பினும் நகரம் அடிக்கடி காட்டுத் தீயை எதிர்கொள்கிறது; அதனால் பேரழிவைச் சந்திக்கிறது. சமீபத்திய காட்டுத்தீ சவால்களையும் துணிச்சலான கதைகளையும் கொண்டு வந்த மற்றொரு நிகழ்வாகும். என்ன நடந்தது: ஒரு நாள் காலை, பசிபிக் பாலிசேட்ஸ், டோபாங்கா, மாலிபு, அல்டாடெனா மற்றும் பசடேனா உள்ளிட்ட பல பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டதால் லாஸ் ஏஞ்சல்ஸை அடர்த்தியான மூடுபனி மூடியது. வறண்ட தாவரங்கள், அதிக வெப்பநிலை மற்றும் வலுவான […]
கல்வி என்றென்றைக்குமான ஒளி!
உலகின் எந்தப் பகுதியை உற்றுநோக்கினாலும், அங்கிருக்கும் மிகச்சிறந்த தலைவர்கள் அனைவருமே கல்வியைத் தங்களது வாழ்க்கைக்கான திறவுகோலாகக் கண்டவர்கள் தான். கடினமான சூழலுக்கு மத்தியில் கல்வியறிவைப் பெற்றதோ அல்லது பெற இயலாமல் போனதோ, ‘அனைவரும் கல்வியறிவு பெற வேண்டும்’ என்ற லட்சியத்தை நோக்கி அவர்களை நகர்த்தியிருக்கிறது. வாழ்வில் என்றென்றைக்குமான ஒளியைப் பெற கல்வி அவசியம் என்ற கருத்தை விதைக்கத் தூண்டியிருக்கிறது. கல்வியின் பயன்கள் குறித்துப் பேசினால் நாட்கணக்கு நீளும். ஏனென்றால், இவ்வுலகில் ஒவ்வொரு மனிதரிடத்திலும் அது பல மாற்றங்களை […]
இதுவும் ஒரு வகையில் பாலியல் துன்புறுத்தல் தான்!
சென்னை அம்பத்துாரில், தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்த அதிகாரி ஒருவர், தங்களுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாக, அங்கு பணிபுரியும் மூன்று பெண்கள், அந்நிறுவனத்தில் உள்ள விசாகா குழுவில் புகார் அளித்தனர். அந்தக்குழு சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வு அல்லது பதவி உயர்வு வழங்கக்கூடாது என, பரிந்துரை செய்தது. இதை எதிர்த்து, அந்த அதிகாரி, சென்னை தொழிலாளர் நல நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். மனுவில், “தன் தரப்பு விளக்கத்தைத் தெரிவிக்க, எந்த வாய்ப்பும் வழங்காமல், விசாரணை […]
திண்டுக்கல் மாவட்டத்தை அச்சுறுத்தும் உண்ணிக் காய்ச்சல்!
‘ஸ்கரப்டைபஸ்’ எனும் பூச்சி கடிப்பதால் உண்ணி காய்ச்சல் ஏற்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2024 டிசம்பரில் குஜிலியம்பாறை, ஒட்டன்சத்திரம் பகுதிகளைச் சேர்ந்த இருவர் இறந்தனர். இதையடுத்து, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. ஒரு சிலர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர். புதிதாக சிலருக்கு உண்ணி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். இந்த நிலையில், இந்த வாரத்தில் மட்டும், எட்டு பேர் உண்ணி […]