தமிழையும் வள்ளுவரையும் முன்னெடுக்கும் புது முயற்சி!

உலகப் பொதுமறையான  திருக்குறள், உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அந்தந்த மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் முயற்சிகள் தொடர்ந்து இன்று வரை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. திருக்குறளையும் திருவள்ளுவரையும் உலகத் தமிழர்களிடம் மட்டுமல்லாது, எல்லா மக்களிடமும் கொண்டு சேர்க்கும் பணிகளும் ஒருபுறம் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டுதானிருக்கின்றன. இது போன்ற முயற்சிகளை, அரசு, தனியார் நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் மட்டுமல்லாமல் தனி நபர்களும் பல்வேறு விதங்களில் முன்னெடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நடிகையும் தொலைக்காட்சித் தொகுப்பாளியுமான திவ்யா கிருஷ்ணன்  […]

மலேசிய மண்ணில் பசுமையை விதைத்தவர்கள்!

ஊர் சுற்றி குறிப்புகள்: வெவ்வேறு காலகட்டத்தில் மலேசியாவுக்கு இந்திய மண்ணில் இருந்து தமிழர்கள் உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தவர்கள் புலம்பெயர்ந்து சென்றிருக்கிறார்கள். சென்ற இடத்தில், அந்த மண்ணை வளப்படுத்தியதில் அவர்களுக்கும் கணிசமான பங்குண்டு. அப்படி சென்ற தமிழர்களில் குறிப்பிட்டத்தக்கபடி இயங்கியவர்களில் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தை மலேசிய மண்ணில் உருவாக்கிய முகமது இத்ரிஷ்-க்கும் முக்கிய பங்குண்டு. தமிழ்நாட்டில் கீழக்கரையிலிருந்து சென்று மலேசிய மண்ணில் வணிக ரீதியாகவும் சமூக ரீதியாகவும் தன்னை வளப்படுத்திக் கொண்டு இறுதிவரை சமூக நேசத்துடன் வாழ்ந்தவர்களில் ஒருவர் […]

இந்தியாவை மாற்ற எப்படிப்பட்ட இளைஞர்கள் தேவை?!

ஆண்டுதோறும் சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினமான ஜனவரி 12 ம் தேதி தேசிய இளைஞர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. எத்தனையோ தலைவர்கள், அறிஞர்கள், சிந்தனையாளர்கள் இந்தியாவில் இருந்திருக்கிறார்கள். அப்படி இருக்க ஒரு ஆன்மிகவாதி எப்படி இளைஞர்களின் அடையாளமாக இருக்க முடியும்? அப்படி என்ன அவர் இளைஞர்களுக்குச் சொன்னார்? அவருடைய வழிகாட்டுதல் 21-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இளைஞர்களுக்குப் பொருந்துமா என்பதை போன்ற கேள்விகள் எழுகிறதல்லவா! எல்லாரையும்விட இளைஞர்கள் மீது அபரிமிதமான நம்பிக்கை கொண்டிருந்தார் விவேகானந்தர். “துடிப்பான இளமை காலத்தில்தான் உங்களுடைய […]

மனிதர்களிடம் இருப்பது வெறும் 100 ஆண்டுகளே!

மனிதர்கள் பூமியில் இருந்து வெளியேறி, மற்றொரு கிரகத்தை சொந்தமாக்கிக் கொள்ளவேண்டும் என்று நினைக்கிறேன். மனிதகுலத்தைக் காப்பாற்ற வேண்டுமானால் இந்த பூமியில் இருந்து அடுத்த 100 வருடங்களில் வெளியேற மனிதர்கள் தயாராக வேண்டும். – மனிதகுலத்தின் எதிர்காலம் பற்றி ஸ்டீஃபன் ஹாக்கிங் கூறியது. நன்றி: பி.பி.சி

90 மணி நேர உழைப்பு என்ன தரும்?

ஒரு மனிதன் எத்தனை மணி நேரம் உழைக்க வேண்டும்? எத்தனை மணி நேரம் ஓய்வெடுக்க வேண்டும்? குறைந்தபட்சமாக, ஆரோக்கியமான உடல் மற்றும் மனநலத்துடன் திகழ எப்படிப்பட்ட வேலை வாய்ப்பினைப் பெற வேண்டும்? குடும்பம், நட்பு, உறவு சூழ் வாழ்க்கைமுறை என்னென்ன பலன்களை வாழ்வில் தரும்? இவை அனைத்துமே வெவ்வேறுவிதமான கேள்விகள். ஆனால், ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட மனிதர், அவரைச் சார்ந்தவர்களின் நலன்களை மட்டுமே முன்னிறுத்தும் வகையிலானவை. தேவையான அளவுக்கு உழைப்பும் ஓய்வும் இருந்தால் மட்டுமே அமைதியான வாழ்க்கைமுறை […]

வில்லியம் ஷேக்ஸ்பியர் – இன்றும் வியப்பை ஏற்படுத்தும் பெயர்!

வில்லியம் ஷேக்ஸ்பியர். இன்றும்கூட வியப்பை உண்டாக்குகிற பெயர் இது. ஓர் ஆண்டுக்கு கிட்டத்தட்ட இரண்டு நாடகங்கள் என்ற கணக்கில் மொத்தம் 37 நாடகங்களை எழுதியிருக்கிறார் ஷேக்ஸ்பியர். கூடவே சானெட் எனப்படும் 154 கவிதைகள். காலம் என்ற எல்லைக்கோடு எல்லாம் வில்லியம் ஷேக்ஸ்பியரின் படைப்புகளுக்கு இல்லவே இல்லை. அவரது 37 நாடகங்களும், சானெட் எனப்படும் 154 கவிதைகளும் சாகாவரம் பெற்று, 400 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றும் உயிர் வாழ்கின்றன. ஷேக்ஸ்பியரின் ஆண்டனியும் கிளியோபாட்ராவும் என்ற நாடகம், அரியதொரு கலைப்படைப்பு. […]