இன்றளவும் ரசிகர்களின் மனதில் நீங்காமலிருக்கும் சௌந்தர்யா!
டைரக்டர் ஆர்வி உதயகுமார், ‘பொன்னுமணி’ படத்துக்காக ஹீரோயின் தேடிக் கொண்டிருந்தார். சாஃப்ட் முகம், அதேசமயம், நடிக்கக்கூடிய பெண்ணாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தார். வழக்கமான ஹீரோயின்களை இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்க வைத்தால், அந்த ஹீரோயினின் இமேஜ்தான் இந்தப் படத்துக்கு வரும் என்பதால், புதுமுகமாகவே தேடிக் கொண்டிருந்தார். புதுமுகங்கள் தேர்வு பல புதுமுகங்கள் வந்தாலும், யாரும் தேர்வு செய்யப்படவில்லை. அப்போது சினிமா எக்ஸ்பிரஸ் என்ற பிரபல பத்திரிகையில், அட்டை படத்தில் சௌந்தர்யாவின் போட்டோ வெளியாகியிருந்தது. இந்த போட்டோவைப் […]
தற்போது அலையடிக்கும் கூட்டணி ஆட்சி பேச்சுக்கள்!
தமிழ்நாட்டில் தற்போது ஊடகங்களிலும் அரசியல் மேடைகளிலும் ஊடக விவாதங்களிலும் அதிகமாக அடிபடுகிற ஒரு சொல்லாக்கம் – கூட்டணி ஆட்சி. தமிழகத்தில் 1967-ல் திமுக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட போதிருந்தே சுதந்திரா கட்சி உட்பட தங்களுடைய கொள்கையிலிருந்து முழுக்க மாறுபட்ட கட்சியையெல்லாம் இணைத்துக் கொண்டு, வலுவானக் கூட்டணியாக தேர்தலைச் சந்தித்தது. வெற்றியும் பெற்றது. ஆனால், அப்போதிருந்தே கூட்டணியில் மற்றக் கட்சிகளுக்கு இடம் கொடுக்கப்பட்டிருக்கிறதே தவிர, கூட்டணி ஆட்சியில் பங்கு என்பது என்கின்ற பேச்சு எழவில்லை. இவ்வளவுக்கும் மாநிலத்தில் சுயாட்சி, […]
சிறைக்குள்ளும் தடுக்க முடியவில்லையா?
செய்தி: புழல் சிறையில் செல்போன், கஞ்சா, சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல். கோவிந்த் கமெண்ட்: தமிழ்நாடு முதல்வர் அடிக்கடி போதைப் பொருட்களைத் தடுக்கக் கோரி உருக்கமான வேண்டுகோள் விடுத்தாலும், போதைத் தடுப்புப் பிரிவு சுறுசுறுப்பாக செயல்படுவதாக சொல்லப்பட்டாலும் தமிழகத்தில் பல பகுதிகளில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாகவே இருக்கிறது. கஞ்சா வியாபாரிகளால் தாக்கப்பட்டு அண்மையில் காவல்துறை அதிகாரி உயிரிழந்திருக்கிறார். சென்னை மாதிரி நகர்ப்புறங்களிலேயே கல்விக் கூடங்களுக்கு அருகிலேயே போதைப் பொருட்கள் தாராளமாக கிடைப்பது குறித்த செய்திகள் […]
‘அல்வா’வுக்கே அல்வா வா?
செய்தி: இருட்டுக் கடை அல்வா உரிமையாளரின் மகளுக்கு வரதட்சணை கொடுமை. கோவிந்த் கமெண்ட்: என்னப்பா இது? எத்தனையோ பேருக்கு பாரம்பரியமா அல்வா கொடுத்துட்டு வர குடும்பத்துக்கே இப்போ அல்வா கொடுக்குறீங்களேப்பா!
நகைச்சுவையினூடே பகுத்தறிவை விதைத்த விவேக்!
தமிழ் சினிமாவின் சின்னக் கலைவாணர், ஜனங்களின் கலைஞன் என நடிகர் விவேக் அழைக்கப்பட்டதற்கு சினிமாவில் அவர் பேசிய முற்போக்கு வசனங்களே காரணம். “இன்னைக்குச் செத்தா நாளைக்கு பால்” என்ற வசனம் தான் விவேக்கின் ஆரம்ப கால வசனங்களில் பிரபலமான ஒன்று. முதலில் கதைக்குத் தேவையான காமெடிகளை வழங்கிக் கொண்டிருந்த விவேக், போகப் போக நகைச்சுவையினூடாகச் சமூகத்துக்குத் தேவையான முற்போக்குக் கருத்துக்களையும் பேசத் தொடங்கினார். காரில் எலுமிச்சம் பழம் கட்டுவது, தீண்டாமைக் கொடுமை, மண் சோறு சாப்பிடுவது என […]
அறுபதில் அடியெடுத்து வைக்கும் ‘சீயான்’!
திரையுலகில் வாய்ப்புத் தேடித் துவண்டு போகிறவர்களுக்கு, மேற்சொன்ன வார்த்தைகளோடு மேற்கோள் காட்ட ஒரு நட்சத்திரம் இருக்கிறார். அவர் பெயர் விக்ரம்.