ஆபரேஷன் சிந்தூர்: 9 இடங்களைக் குறிவைத்தது ஏன்?
‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவத் தாக்குதலில் பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 இடங்களைக் குறி வைத்து தாக்கி உள்ளது இந்தியா.
செல்லப் பிராணிகளின் தாகம் தீர்த்த நண்பர்கள் குழு!
ராஜஸ்தான் மாநிலத்தில் 35 கிராமங்களில் மாடுகள், செல்லப் பிராணிகள் மற்றும் பறவைகளின் தாகம் தீர்ப்பதற்காக தண்ணீர் தொட்டிகள் உருவாக்குதல், குளங்களை சீரமைத்தல் என சாதனை செய்துள்ளனர் ஏழு நண்பர்கள்.
எல்லையோரத்தில் மீண்டும் நீடிக்கும் பதற்றங்கள்!
அண்மையில் காஷ்மீரில் பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு இலக்காகி, அங்கு சுற்றுலாவிற்குச் சென்றிருந்த 26 பேர் உயிரிழந்திருப்பது இந்தியாவில் மட்டுமல்ல, சர்வதேச அளவிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பல நாடுகள் இந்த பயங்கரவாதச் செயலைக் கடுமையாகக் கண்டித்திருக்கின்றன. ஐ.நா.வும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. இந்தியாவிலும் பரவலாக இந்தச் சம்பவத்திற்கு எதிரான கண்டனங்கள் வலுத்திருக்கின்றன. உள்துறை அமைச்சரும், பாரதப் பிரதமரும் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்திருக்கிறார்கள். பாதுகாப்பு அமைச்சரும் அத்தகைய எச்சரிக்கையைக் கடுமையாக விடுத்திருந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பாகிஸ்தானிய எல்லையோரம் […]
இந்தியாவிலிருந்து வெளியேறும் பாகிஸ்தானியர்கள்!
பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் ரோஜாவில் பயங்கரவாத முள்!
காஷ்மீரில் பயங்கரவாதிகள் அதிரடியாக ஊடுருவி தாக்குதல் நடத்துவது புதிதல்ல என்றாலும், தற்போது நடந்திருக்கிற பயங்கரவாதத் தாக்குதல் அதிர்ச்சிகரமானது. இதற்கு முன்பு நடந்த பல தாக்குதல்கள் இந்திய ராணுவத்தையோ, காஷ்மீர் அரசுக்கு சொந்தமானவற்றையோ மையப்படுத்தி நடத்த தாக்குதல்களாகவே பெரும்பாலும் அமைந்திருக்கின்றன. அப்படி நடந்த தாக்குதல்களுக்கு பாகிஸ்தானில் உள்ள சில பயங்கரவாத அமைப்புகள் உடனே பொறுப்பேற்றிருக்கின்றன. அதாவது, அதிரடியான நிகழ்வுகளை நிகழ்த்தி தங்களது இயக்கத்தின் இருப்பை வெளி உலகிற்கு வெளிப்படுத்தி தங்களது கோரிக்கைகளை முன்வைப்பதுதான் பெரும்பாலும் தாக்குதல்களின் நோக்கமாக இருந்திருக்கிறது. […]
உச்சநீதிமன்றத் தீர்ப்பும் பாஜகவின் கண்டனங்களும்!
பாஜகவைச் சேர்ந்த பல மாநில நிர்வாகிகள், உச்சநீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்புக்கு எதிராக தங்களுடைய பலத்த கண்டனங்களை எழுப்பி வருகிறார்கள்.