இடைத்தேர்தல் : சூடு பிடிக்கும் பிரச்சாரம்!

கிரிக்கெட் விளையாட்டில் ஒன் டே மேட்ச் பெறும் கவனத்தை தற்போது மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவிலும் எதிர்பார்க்கப்படுகிறது. நான்கு மாதங்களைத் தாண்டிய தவெக ஆட்சிக்கு இந்தத் தேர்தல் களம் ஒரு சவாலான நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.  சென்ற சட்டசபைத் தேர்தலில் அதிமுக அணியில் நின்று வெற்றி பெற்று மிகக்குறுகிய காலத்தில் தவெகவிற்கு சென்ற அதே வேட்பாளர்கள் மீண்டும் தவெக சார்பிலேயே களத்தில் இறக்கிவிடப்பட்டிருக்கிறார்கள். இதைவிடப் புதிய வேட்பாளர்களை களத்தில் இறக்கிவிட்டிருந்தால் தற்போதுவிட கூடுதல் கவனத்தை அவர்கள் பெற்றிருக்கலாம். இரட்டை […]

செயல்பாட்டின் முதல் எதிரி கோபம்!

தாய் சிலேட்: கோபப்படும் மனிதனால் சிறப்பாக வேலைகள் செய்ய முடியாது. அமைதியான, மன்னிக்கக்கூடிய, சம நோக்குடைய, நிலைகுலையாத மனமுடையவனே அதிகளவு சிறப்பாக செயல்பட முடியும். – விவேகானந்தர்  

துயரங்களைத் தாண்டி வாழத் துடிப்பதே நம்பிக்கை!

வாசிப்பின் ருசி : மனித வாழ்வே துயரம்தானா என்று யோசிக்கும்போது முள்செடியில் மொட்டவிழ்க்கும் பூ மாதிரி, வாழ்வு, தன் அழகை நமக்குக் கையளித்துக் கொண்டேதான் இருக்கிறது; அந்த நொடிக்காகத்தான் மனித மனம் எவ்வளவு துயரத்தையும் தாண்டி வாழத் துடிக்கிறது! எழுத்தாளரும் இயக்குநருமான சீனு ராமசாமியின் கட்டுரைத் தொகுப்பான ‘பெரும் மௌனங்கள்’ நூலில் கே.வி.ஷைலஜா எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி.

தமிழகத்தில் சிறுமிகளுக்கு ஏன் இந்தத் தொடர் அவலம்?

‘குழந்தைகள் தினம்’ என்று தனித்துக் கொண்டாடும் நாம்தான் தற்போது தொடர்ந்து சிறுமிகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் அத்துமீறல்கள் தொடர்ச்சியாக நிகழ்வதைப் பார்த்தும் மனம் பதைபதைத்துப் போகிறோம். தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் பள்ளியில் படிக்கக் கூடிய மாணவிகளை அங்குள்ள ஆசிரியர்களே பாலியல் ரீதியாக துன்புறுத்துவது குறித்த செய்திகளை அடிக்கடி பார்த்திருக்கிறோம். அதை எதிர்த்து பல பள்ளிகளுக்கு முன்னால் பெற்றோர்கள் போராடியதையும் குற்றச்சாட்டுக்குள்ளான ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதையும் பார்த்து அதிர்ந்திருக்கிறோம். தெருவில் சிறுமிகள் போகும்போது […]

பீல் பழங்குடி – விட்டுக் கொடுக்காத வில்!

கடந்த 21.09.2026 திங்கள்கிழமை அன்று ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் சார்பில் சிந்துவெளி ஆய்வு மையத்தின் மதிப்புறு ஆலோசகர் ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப் பணியாளர் ஆர்.பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்கள் “பீல் பழங்குடி விட்டுக் கொடுக்காத வில்” எனும் தலைப்பில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உரையாற்றினார்கள். சிந்துவெளி நாளைக் கொண்டாடும் நாளில் ஏன் பீல் பழங்குடிகளைப் பற்றிப் பேச வேண்டும்? சிந்துவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே என்று மறுக்க முடியாத தரவுகளோடு […]

எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த கண்ணதாசன் பாடல்!

கண்ணதாசன் 100 :  பாடல் – 5 மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் மனைவியும் தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சருமான திருமதி வி.என்.ஜானகி தனது கணவரைப் பற்றி எழுதிய நூலில், எம்.ஜி.ஆர் அவர்களுக்கு மிகவும் பிடித்த பாடல் பற்றி கூறியுள்ளார். “என்னவர் நடித்த ‘மன்னாதி மன்னன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற கவியரசரின் பாடலான ‘அச்சம் என்பது மடமையடா’ என்ற பாடல் அவருக்கு மிகவும் பிடித்தது. பயணத்தின்போது அடிக்கடி இந்தப் பாடலைக் கேட்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்” என்று குறிப்பிட்டிருக்கிறார். எம்.ஜி.ஆர் […]