திண்ணை, முற்றம், புழக்கடை, சமையலறை ஆகியவை இயற்கையோடும், சமூகத்தோடும் முறையாக உறவு கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டவை. புதுச்சேரியில் இந்த தமிழ் வீடு பிரெஞ்சு கட்டடக்கலையுடன் எவ்வாறு இணைந்திருக்கிறது என ஆராய்வது மிகவும் சுவையானது.
ஜெயகாந்தன் தனது எழுத்துக்களின் மூலமாக இன்னமும் நம்மிடையே வாழ்ந்து வர வேண்டும் என்றால் அவரது எழுத்துகள் மீண்டும் மீண்டும் புத்தகங்களாக வெளியிடப் பட வேண்டும்.
தேவா, சென்னை நகரத்து கானா பாடல் பற்றி பேசத் தொடங்கிவிட்டால் ஒரு நாளெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கலாம். தமிழ் சினிமாவில் தேனிசைத் தென்றல் தேவாவாக கொடிகட்டிப் பறக்கும் இவரது ரகசியம் இதுதான். எளிமை, இனிமை, உழைப்பு.