விடுதலை 2 – எதிர்பார்ப்புகள் பொய்க்கவில்லை!
சில இயக்குநர்களின் திரைப்படங்கள் கமர்ஷியல் மதிப்பீடுகளுக்கும் கலையம்சங்களுக்குமான இடைவெளியைச் சரியாகப் பயன்படுத்தும். இரு வேறு விதமான ரசிகர்களைத் திருப்திப்படுத்துவதோடு, அந்த இயக்குநரின் முத்திரையும் அப்படைப்பில் தென்படும்விதமாக அமையும்.