புத்தகங்கள் உண்மையான கால இயந்திரம். புத்தகங்களை வாசிப்பதன் வழியே உலகை தெரிந்து கொள்வதுடன் நம்மைப் பற்றியும் அறிந்து கொள்கிறோம். நம்மிடம் உருவாகும் மாற்றங்கள் சமூகத்திலும் எதிரொலிக்கும் என்பதே நிஜம்.
உலகில் ஒரு தனி மனிதனால் என்னென்ன சாதனைகள் செய்யப்பட்டது என்பதை பற்றியும், தனி மனிதன் உலகின் மீது எவ்வளவு அக்கறையும் சக மனிதனின் மீது எவ்வளவு அன்பும் வைத்திருக்கிறான் என்பதை பற்றியும் விளக்கியுள்ளார் ஆசிரியர்.