இப்படியும் அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்!

செய்தி:   

தமிழகத்தில் 48 மணி நேரம் சிறப்பு அதிரடி நடவடிக்கை; சைபர் மோசடிக்கு உதவிய 837 பேர் கைது;

– 204 செல்ஃபோன்கள், 185 சிம் கார்டுகள் பறிமுதல்.

கோவிந்த் கமெண்ட்: 

தற்போது சைபர் கிரைம் மோசடிகள் அதிகமாக நடந்துவருவது தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கே தெரியுமோ என்னவோ அண்மைக்காலமாக நாம் அலைபேசியை ஆன் பண்ணி யாருக்காவது பேச ஆரம்பித்தாலே, சைபர் க்ரைம் பற்றிய எச்சரிக்கையை கேட்டுவிட்டுத்தான் பேச வேண்டியிருக்கிறது.

அந்தளவுக்கு செல்ஃபோன் வைத்திருப்பவர்களையும் செல்ஃபோனில் இணைத்து வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களையும் குறிவைத்தே பலவிதமான மோசடிகள் நடந்துவருவதை பல வங்கிகளில் அன்றாடம் பார்க்கமுடியும்.

அதிலும், கிராமப்புறங்களில் பென்சன் மற்றும் அரசு உதவித் தொகையைப் பெறும், அதிகம் படிக்காத பெண்களைக் குறிவைத்து அவர்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை டெக்னிக்லாக திருடுவது தற்போது அதிகரித்திருக்கிறது.

இது சம்பந்தமான புகார்களும் அதிகரித்திருப்பதை சைபர் கிரைம் துறையில் பார்க்க முடியும்.

தற்போது, இரண்டு நாட்களுக்குள் 837 பேர் சைபர் கிரைமில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்றால், சாதாரண பொதுமக்களின் பணம் எந்தளவுக்கு டெக்னாலஜியை வைத்து பறிபோய்க் கொண்டிருக்கிறது.

அதேசமயம் இந்தக் குற்றங்களையெல்லாம் நடந்துகொண்டிருக்கும்போதே நாம் டிஜிட்டல் இந்தியா பற்றி பெருமிதமாகப் பேசிக் கொண்டிருக்கிறோம்.

Comments (0)
Add Comment