பாரம்பரிய உணவும் பாத்திரங்களின் பரிணாமமும்!
செப்டம்பர் 25 தேசிய சமையல் தினம் சமையல் என்பது பாத்திரங்கள், காய்கறி மசாலா பொருட்களில் மட்டுமே இருக்கிறது என நம்மில் பெரும்பாலானோர் எண்ணிக் கொண்டிருக்கிறோம். உணவு என்பது மனித உணர்வுகளையும், பண்பாட்டையும், குடும்ப உறவுகளையும் பிணைக்கும் ஓர் அற்புதக் கலை தான் சமையல். இந்தச் சமையல் கலையைப் போற்றவும், ஆரோக்கியமான வீட்டு உணவை ஊக்குவிக்கவும் தேசிய சமையல் தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 25 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தேசிய சமையல் தினம் வரலாறு: இந்த தினத்தை […]
மூங்கிலரிசியை அறியாத முதல் தலைமுறை!
மூங்கிலரிசி, முலரி என்றும் அழைக்கப்படுகிறது. பலர் இந்த மூங்கில் அரிசியை குறித்து கேள்விபட்டிருக்க மாட்டார்கள். இது மூங்கில் மரத்திலிருந்து பெறப்படும் அரிசி. ஒரு மூங்கில் வளர்ந்து அதன் கடைசி ஆயுள் காலத்தை நெருங்கும்போது, அது புதிய மரங்களுக்காக விதைகளை உற்பத்தி செய்து அதிகமாக பூக்கத் தொடங்கும். அதிலிருந்து வரும் மூங்கில் விதைகளே மூங்கிலரிசி எனப்படுகிறது. இந்த அரிசி பச்சை நிறத்தில் சிறியதாக இருக்கும். இந்த விதைகள் உலர்த்தப்பட்ட பின்னர் அரிசியாக பயன்படுத்தப்படுகிறது. இது சந்தைகளில் மிக அரிதாகவே […]
தூக்கமின்மையைத் தூர விரட்டுவோம்!
முறையான தூக்கம் என்பது ஆரோக்கிய வாழ்விற்கான அஸ்திவாரம் என்பதை உணர்ந்து, அதனை உடலுக்கு வழங்கி மகிழ்ச்சியான வாழ்க்கையை வசமாக்கிக் கொள்வோம்.
வயதைக் கடந்து வாழ்வில் ஜெயிப்போம்!
உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினமும் கடந்து போகும் காலத்தின் அளவையே வயது என்கிறோம். அதிலும் மனித வாழ்க்கையில் இது வெறும் எண்களைக் குறிக்கும் விஷயம் இல்லை. நாட்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்களாக உருண்டோடும் ஒவ்வொரு நிகழ்விலும் பல்வேறு மாற்றங்களையும் அனுபவங்களையும் தரும் ஒரு தொடர்ச்சியான பயணமாக இது கருதப்படுகிறது. குறிப்பாக, பெண்கள் தங்களின் 20 மற்றும் 30 வயதுகளில் குடும்பம், குழந்தை வளர்ப்பு, வேலை என பிறருக்காகவே ஓடியவர்கள் 40 வயதை எட்டும்போது, தங்களின் சுய அடையாளத்தைப் […]
அழகும் ஆரோக்கியமும் எந்த உணவில் அதிகம்?
இயற்கையின் படைப்பில் உள்ள ஒவ்வொரு பொருளும் அதற்கே உண்டான தனித்துவமான அழகை பெற்றுள்ளது. மலர்கள், நதிகள், மலைகள் ஆகியவற்றை போல மனிதனின் அழகு என்பது ஒவ்வொரு பருவ வயதிலும் உடல் மற்றும் மன மாற்றங்களுக்கு ஏற்ப இயற்கையாக மாறுபடுகிறது. அழகு என்பது பெண்களுக்கு மட்டுமே உரித்தானது என்ற எண்ணம் மாறி, தற்போது ஆண் பெண் என இரு பாலாருக்கும் பொதுவான ஒன்றாக உள்ளது. அழகாக தோற்றமளிப்பது ஒருவரின் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்கிறது. ஆளுமைத் திறனை பன்மடங்கு கூட்டுகிறது. […]
நல்ல தண்ணீருக்கு நவீனத் தொழில்நுட்பம் தேவையா?
மனிதர்களின் உயிர் வாழ்விற்கும் ஆரோக்கியம் பேணுவதற்கும் பாதுகாப்பான குடிநீர் அவசியமான அடிப்படை தேவையாகும். இது நோய்களைத் தடுத்து உடலின் சீரான இயக்கத்திற்கு உதவுகிறது. ஆனால், தற்காலத்தில் நிலத்தடி மற்றும் குழாய் வழியே வரும் தண்ணீரில் பல்வேறு மாசுக்கள் கலக்கின்றன. இந்தியாவில் 70 சதவீத தொற்று நோய்கள் தண்ணீர் மூலமே பரவுகின்றன என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. பாதுகாப்பான தண்ணீர் பருகாததால் ஏற்படும் பிரச்சனைகள் ஏராளமாகும். நீரை காய்ச்சி, வடிகட்டி ஆற வைத்து குடிப்பதற்கு எல்லாம் நம்மில் […]