அதிமுக துவக்க நாளில் தொண்டர்களுக்கு ஒரு செய்தி!
அக்டோபர் 17 – அதிமுக என்கின்ற மகத்தான பொன்விழா கண்ட இயக்கம் துவக்கப்பட்ட நாள். இதே நாளில் மிக எளிமையாக ஒரு மாபெரும் மக்கள் இயக்கத்தைத் துவக்கியவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள். அவர் நம் நினைவுகளில் ஐக்கியமாகி 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆனாலும் இன்னும் அவரைப் பற்றிய நினைவு மட்டும் பலரிடம் உயிரோட்டமாக இருக்கிறது. அதிமுக என்கின்ற இயக்கத்தை நிறுவிய எம்.ஜி.ஆரைப் பற்றிய மிக அபூர்வமான ஆவணம் உருவாக்கப்பட்டு அழகான வடிவமைப்பில் […]
தனிப்பட்ட விரோதங்களை என்றுமே பார்ப்பதில்லை!
“பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும் அண்ணன் தம்பிகள் தானடா” – கவியரசர் கண்ணதாசன் கண்ணதாசன் நினைவுநாள் (24 ஜுன் 1927 – 17 அக்டோபர் 1981). * “என் மனசாட்சிக்கு எது நியாயம் என்று படுகிறதோ, அதையே நான் எப்போதும் செய்வேன். அரசவைக் கவிஞராக நான் கண்ணதாசனை நியமித்தேன். அவர் என்னை பேசாத பேச்சு, எழுதாத எழுத்து, திட்டாத திட்டு கிடையாது. நான் அவரை அரசவைக் கவிஞராக நியமித்ததும் […]
கடன் வசூலும் கத்திரிப் பூ கலரும்…!
வாசிப்பின் ருசி : கத்திரிப் பூவின் கருநீலத்தை, ஒரு கருநீலக் கத்தரிக்காயை, கையில் தென்னியிருக்கும் முதிய நரம்பை வரைய முடிகிற ஜெயாம்மா ஒரு நல்ல கலைஞர்தான். நான் வங்கிக் கள அதிகாரிப் பணியில் இருக்கும்போது கடன் வசூலுக்குப் போயிருந்தேன். அந்த விவசாயி இப்படி ஒரு சிறிய கத்திரி வயலில் இருந்தார். எங்கு பார்த்தாலும் கரு நீலக் கத்திரிப் பூக்களும், இளம் கருநீலக் கத்திரிப் பிஞ்சுகளும், அவரைச் சுற்றி. நான் கடன் […]
கர்ஜனைக்கு ஓய்வு தந்த தருணத்தில் சிவாஜி!
இயக்குநர் ஏ.பீம்சிங், சிவாஜி கணேசனை வைத்து ‘ப’ என்ற எழுத்தில் தொடங்கும் பல குடும்பக் காவியங்களை இயக்கியுள்ளார். 1962-ல் ‘படித்தால் மட்டும் போதுமா’ திரைப்படம் அவற்றில் ஒன்று. படிப்பை விட மனிதநேயமும் பாசமுமே முக்கியம் என்பதை அழகாக விளக்குகிய படம் இது. மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையில், கவிஞர் கண்ணதாசன் வரிகளில் இப்படத்தின் அனைத்துப் பாடல்களும் மாபெரும் வெற்றி பெற்றன அதில், “பொன்னொன்று கண்டேன், பெண் அங்கு இல்லை…” – பி.பி. ஸ்ரீனிவாஸ் மற்றும் […]
ஒவ்வொருவர் வாழ்க்கைக்கும் ஒரு காரணம்!
வாசிப்பின் ருசி : வாழ்க்கை அர்த்தம் மிகுந்தது; ஒவ்வொருவர் வாழ்க்கைக்கும் ஒரு காரணமும் அவசியமும் இருக்கிறது. அதை அறிந்துகொள்வதும் அறியாமல் கடப்பதும் அவரவர் தேடுதல் தொடர்பானது. ஆனால், எந்த மனிதனும் தேவையற்றவன் இல்லை; எந்த வாழ்க்கையும் பயனற்றதும் இல்லை. – எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்
மக்கள் மனதை வென்ற எழுத்தாளர் சிவசங்கரி!
அது எப்படியும் 20 வருடங்களுக்கு மேல் இருக்கும். சிவசங்கரியின் வீடு தேடி, கண்டுபிடித்து, அவர் வீட்டு வாசலை அடைந்ததும் உள்ளே சென்று அவரிடம் பேசியதும் நன்றாக நினைவிருக்கிறது. கிளம்பும்போது, வீட்டு வாசற்கதவை சாத்துவதற்கு கொக்கியை எடுக்கும்போதுதான் கவனித்தேன்… அந்தப் பலகையை! பலரின் வீட்டில், ‘நாய்கள் ஜாக்கிரதை’ என்பது தமிழிலோ ஆங்கிலத்திலோ இருக்கும். ஆனால், சிவசங்கரியின் வீட்டு வாசலில் இருந்த அறிவிப்பில், ‘சியாமளா உள்ளே இருக்கிறாள்’ என்றிருந்தது. சிவசங்கரி வளர்க்கும் நாயின் பெயர் சியாமளா! […]