தமிழ்நாடு

இடைத்தேர்தல் : சூடு பிடிக்கும் பிரச்சாரம்!

கிரிக்கெட் விளையாட்டில் ஒன் டே மேட்ச் பெறும் கவனத்தை தற்போது மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவிலும் எதிர்பார்க்கப்படுகிறது. நான்கு மாதங்களைத் தாண்டிய தவெக ஆட்சிக்கு இந்தத் தேர்தல் களம் ஒரு சவாலான நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.  சென்ற சட்டசபைத் தேர்தலில் அதிமுக அணியில் நின்று வெற்றி பெற்று மிகக்குறுகிய காலத்தில் தவெகவிற்கு சென்ற அதே வேட்பாளர்கள் மீண்டும் தவெக சார்பிலேயே களத்தில் இறக்கிவிடப்பட்டிருக்கிறார்கள். இதைவிடப் புதிய வேட்பாளர்களை களத்தில் இறக்கிவிட்டிருந்தால் தற்போதுவிட கூடுதல் கவனத்தை அவர்கள் பெற்றிருக்கலாம். இரட்டை […]

கிளறக் கிளற வெளி வரும் முந்தைய வழக்குகள்!

எங்கள் ஆட்சியில் தப்பு செய்யவும் விடமாட்டோம், ஏற்கனவே தப்பு செய்தவர்களையும் விடமாட்டோம் என்று அண்மையில் பேசியிருந்தார் முதல்வர் விஜய். அவர் சொல்கிறபடியே திமுக தரப்பில் உள்ள பல்வேறு முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றமும் தலையிட்டு சில வழிகாட்டு நெறிமுறைகளை அறிவுறுத்திய நிலையிலும் சம்பந்தப்பட்ட வழக்குகள் முன்னகராமல் அப்படியே நிற்கின்றன. இதற்கு, தமிழக ஆளுநர் அனுமதி அளிக்காததை காரணமாக சொல்கிறார்கள் தவெக அமைச்சர்கள். தமிழகத்தில் உள்ள திமுக அமைச்சர்கள் பலர் மீது வெளிப்படையான ஊழல் […]

பரந்தூர் ஏற்றமும்; பட்டினப்பாக்கம் சறுக்கலும்!

தவெக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த 4 மாதங்களுக்குள் பல முன்னேற்றங்களும் நிகழ்ந்திருக்கின்றன. குறிப்பிட்ட சில பின்னடைவுகளும் நிகழ்ந்திருக்கின்றன. சில மாதங்களுக்கு முன்புதான் மிக நீண்ட நாட்களாகப் பேசப்பட்டு, அங்குள்ள மக்களால் தொடர் போராட்ட வடிவம் எடுத்த, பரந்தூர் விமான நிலையம் குறித்த ஒரு திட்டவட்டமான முடிவை தவெக அரசு அறிவித்தது. அப்போது, அதற்கு சம்பந்தப்பட்ட விவசாயிகள் மட்டுமல்ல, தமிழக அளவில் ஒரு பரந்துபட்ட ஆதரவு தவெக அரசுக்குக் கிடைத்தது. இந்த நிலையில் ஒரு சறுக்கலைப் போல தற்போது […]

இடைத்தேர்தல்: வாய்ப்புகள் யாருக்கு சாதகம்?

எதிர்பார்த்தபடியே முதற்கட்டமாக தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் திமுக கூட்டணி பலம் குறைந்த நிலையில் போட்டியிடுகிறது. அதிமுக, பாஜக உடனான கூட்டணியுடன் போட்டியிடுகிறது. தவெகவோ – புதிதாக இணைந்திருக்கிற காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, ஐ.யூ.எம்.எல். போன்ற பல கட்சிகளுடன் போட்டியிடுகிறது. சற்றென்று, போட்டியிடும் வேட்பாளரிடம் நிகழக்கூடிய மனமாற்றம், அவர்களை தேர்ந்தெடுக்கிற வாக்காளப் பெருமக்களிடம் அவ்வளவு எளிதாக நிகழ்ந்து விடாது என்பதைத்தான் இது உணர்த்துகிறது. இருந்தாலும் இந்தத் தேர்தலில் […]

சொல் இழுக்குப் படுகிறவர்கள் யார்?

“யாகாவராயினும் நா காக்க” என்கிற குரலின் முதல் அடியை தற்போதைய அரசியல் சூழலில் பலரும் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறார்கள். அப்படி நினைவூட்டுவது ஒருபுறம் நடந்தாலும் அந்தக் குரலின் அடுத்த வரியான  “சோகாப்பர் சொல் இழுக்குப் பட்டு” என்கிற வரியை நிகழ்காலத்தின் தேவை கருதி நாம் வலியுறுத்த வேண்டி இருக்கிறது. “ஆபாச நதியைப் பற்றியும் வன்ம நதியைப் பற்றியும் தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் வெளிப்படையாகப் பேசிய பிறகு அவர் குறிப்பிட்ட ஆபாசமும் வன்மமும் முன்பிருந்ததைவிட அதிகப்பட்டிருக்கிறது. சட்டசபை […]

கனவுக் கிராமம்!

பொதுவாக கிராமங்கள் இன்று சாதியாலும், மதத்தாலும், கட்சியாலும், ஏற்றத்தாழ்வுகளாலும் பிரிந்து கிடக்கின்றன. இந்த பிரிவுகளிலிருந்து ஒன்றுபட தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபட விளையாட்டு ஒன்றே தீர்வு