எம்.ஜி.ஆருக்கு அண்ணா தந்த அட்டைப் படம்!
தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளுக்குள் சோதனை தொடங்கியது. முதலமைச்சர் அண்ணா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். சென்னையில் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் அமெரிக்காவுக்கு உயர் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அமெரிக்கா புறப்படும்முன், திமுகவில் எம்.ஜி.ஆரின் முக்கியத்துவத்தை அவருக்கே மறைமுகமாக உணர்த்தும் வகையில் அண்ணா ஒரு காரியம் செய்தார். அது, திமுக முன்னணித் தலைவர்கள் பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது. சிகிச்சைக்காக அமெரிக்காவுக்குப் புறப்பட்ட அண்ணா, மும்பை விமான நிலைய வளாகத்தில் தனியறை ஒன்றில் ஓய்வெடுத்தார். அந்த அறையில் […]
மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த உணவு!
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் சாப்பிடுவதில் காட்டுகிற அக்கறையும் தனது வீட்டுக்கு வந்தவர்களை உபசரிப்பதில் காட்டும் அக்கறையும் பிரசித்தமானவை. பல மாநில முதலமைச்சர்களும் அவர் வீட்டுக்கு வருகை தந்து எம்.ஜி.ஆரின் கனிவான உபசரிப்பை ஏற்று அந்த அனுபவத்தை மதிப்புடன் பதிவு செய்திருக்கிறார். அவ்வளவு ஏன்? ஈழப் போராளியான பிரபாகரனும் தன்னுடைய நண்பரான அன்டன் பாலசிங்கம் உடன் ராமவரம் தோட்டத்திற்கு காலை உணவருந்த சென்றபோது, எப்படியெல்லாம் அசைவ உணவு பரிமாறப்பட்டு எம்.ஜி.ஆர். எப்படி தங்களை கவனித்துக் கொண்டார் என்பதை […]
எம்.ஜி.ஆர். காட்டிய மறக்க முடியாத பாசம்!
இயக்குநர் சித்ரா லட்சுமணன் எடுத்த பேட்டி ஒன்றில் பல்வேறுபட்ட தன்னுடைய திரை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார் நடிகர் குண்டு கல்யாணம். அப்போது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., திருமதி ஜானகி அம்மையார் மற்றும் ரஜினி உள்ளிட்ட பலரைப் பற்றி அவர் வெளிப்படையாக பகிர்ந்து கொண்ட அனுபவங்கள் பார்வையாளர்களை ஈர்க்கக்கூடிய விதத்தில் இருந்தன. அவற்றிலிருந்து சில பகுதிகள். “என்னுடைய அப்பாவான குண்டு கருப்பையா, எம்.ஜி.ஆருடைய நாடகங்களில் தொடர்ந்து நடித்து வந்தவர். அவருடைய திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். ‘அந்தமான் கைதி’ என்ற திரைப்படத்தில் […]
இயக்குநர் ஸ்ரீதர் கணக்கை நேர் செய்த எம்.ஜி.ஆர்!
ஸ்ரீதர் தனது ‘சித்ராலயா’ நிறுவனம் மூலம் ‘அன்று சிந்திய ரத்தம்’ படத்தில் நடிப்பதற்காக அட்வான்ஸ் தொகையாக ஆரம்பத்தில் எம்.ஜி.ஆருக்கு ரூ. 25,000 கொடுத்தார். படம் நின்றுவிட்ட நிலையில், சில காட்சிகள் நடித்ததற்காக எம்.ஜி.ஆருக்கு கொடுக்கப்பட்ட தொகையாக நினைத்து அந்தப் பணத்தை ஸ்ரீதரும் கேட்கவில்லை. அந்த நேரத்தில் புதுமுகங்களை வைத்து ‘காதலிக்க நேரமில்லை’ என்னும் படத்தை எடுத்தார். ஏற்கெனவே, எம்.ஜி.ஆருடன் இணைந்து செய்வதாக இருந்த படம் நின்று போன நிலையில், மீண்டும் அவரை அணுகுவதா? என்று […]
நாடகத்தில் ராஜா வேடம் போட்டவர் நாட்டை ஆண்ட வரலாறு!
நாடகத்தில் ராஜா வேடத்தில் நடித்த எங்களுக்கு, நிஜமாகவே ஆட்சி புரியவும் முடியும் என்பதை எம்ஜிஆர் நிரூபித்திருக்கிறார் என்று மகிழ்ந்தார் எம்.கே.ராதா.
எம்ஜிஆர் மீது எல்லை இல்லா பாசம் கொண்ட ராணுவ வீரர்கள்!
இதயவீணை படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது. அப்போது ஒரு பாடல் காட்சிக்கு மலை உச்சி நோக்கி வாத்தியார் மற்றும் படக் குழுவினர் வாகனங்கள் சென்று கொண்டு இருந்தது. அந்த சாலை இந்திய ராணுவ வீரர்கள் கட்டுப்பாட்டில் இருக்க, ரோந்தில் இருந்த ராணுவவீரர்கள் வாத்தியார் குழு சென்ற வாகனங்களில் ஒன்று, சாலை ஓரத்தில் இருந்து கிடு கிடு பள்ளம் நோக்கி சிக்கி கொண்டது. வாத்தியார் உட்பட உடன் நடிக்கும் குழுவினர் மற்றும் திகைத்து நிற்க, அப்போது அணி வகுத்து […]