சினிமா

மொழிபெயர்ப்புகளில் வரும் சிக்கல்களும் தீர்வுகளும்!

கேள்வி : பேச்சு மொழியில் இருக்கும் ஒலிச்சிதைவை அப்படியே உரைநடையில் பயன்படுத்துவது கடினமாக இருக்கிறது. பூர்ணமாக கையாள முடியவதில்லை. அப்படியே கையாள முடிந்தால் அப்படைப்பு ரசிக்கும் விதமாய் இருக்குமா? எழுத்தாளர் அசோகமித்திரன் பதில் : சிலபேரு மண்வாசனைக்காக பண்றோம்ன்னு பண்றாங்க. அது என்ன ஆயிடுறதுன்னா பேச்சுத் தன்மைக்கு அதிகமாகப் போய் புரியாம போயிடுறது. கொஞ்சமா இருந்தா பரவாயில்லை. வரிக்கு வரி புரியாம போயிடுச்சுன்னா ஒரு தொடர்பே ஏற்படுத்திக்க முடியாம போயிடும். மொழி பெயர்ப்பு எடுத்துக்கிட்டா அவனால எப்படி […]

என்ன விலை: அர்த்தமுள்ள கேள்வியை எழுப்பியுள்ள படம்!

விலை மதிக்க முடியாத சிலவற்றை, என்ன விலை என்று கேட்கும் அர்த்தமுள்ள கதை திரைக்கதையோடு சிறப்பாக இயக்கி இருக்கிறார் ராஜீவ் பாழூர்.

இசை என்பது கடல்; நான் ஒரு மாணவி!

குட்டியூண்டு தெருவில் படு எளிமையான வீடு என்று தான் அந்த வீட்டைச் சொல்ல வேண்டும்.   கோவிலுக்குப் பெயர் போன மதுரை. மீனாட்சியம்மன் கோவிலுக்குப் போகிற மேலக் கோபுரத் தெருவிலிருந்து கிளை பிரிகிற குறுகலான மேல ஹனுமந்தராயன் கோவில் தெரு.   அதில் சற்று நகர்ந்தால் முகப்பில் வீணை வடிவில் சிலை. பழமை இன்னும் மாறாத இந்த வீட்டில் இரண்டாவது குழந்தையாகப் பிறந்தவர் குஞ்சம்மா. பின்னாளில் எம்.எஸ். அம்மா. பிறந்தது 1916-ம் ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதி. […]

பாரதிராஜாவைப் புகழ்ந்து பேசிய கி.ராஜநாராயணன்!

ஆச்சர்யம் தான்.  புதுவையில் அப்போது வசித்துவந்த கி.ராஜநாராயணன் அவர்களைப் பார்க்கப் போனபோது வழக்கம்போல அவருக்கே உரித்தான கேலி கலந்த மொழியுடன் சொல்லிக் கொண்டு போனவர், இடையில் நிறுத்தி இப்படிச் சொன்னார்: “இதுவரை எவ்வளவோ படைப்புகளை கரிசல் மண்ணை வைத்து நான் எழுதியிருக்கேன். என்னைப் போல மற்றவர்களும் எழுதி இருக்காங்க. இதில், சிலருடைய கதைகளை, எழுத்தாளர்களிடமே சொல்லாமல் திருடியது எல்லாம் இதே சினிமா துறையில் நடந்திருக்கிறது. அதே துறையில் இருந்த பாரதிராஜா முதல் மரியாதை படத்தை எடுக்கும்போது என்னை […]

சேதமின்றி கரை சேர்ந்திருக்கிறது மண்டாடிப் படகு!

பலவீனம், குழப்பம், கொண்ட முத்துக்காளி அணியை, பழம் தின்று கொட்டை போட்ட சட்டாப்புலி போட்டிக்கு அழைத்து கடலிலேயே தீர்த்துக்கட்ட திட்டமிட, நடந்தது என்ன என்பதே இந்த மண்டாடி.

கவிதை, திரையிசைப் பாடல் – எது தனித்துவமானவை?

கேள்வி: கவிதை ஆக்கம், திரைப்படப் பாடல் ஆக்கம் இவை இரண்டுக்குமான தனித் தன்மையாக எதைப் பார்க்கிறீர்கள்? கவிஞர் மு.மேத்தா பதில்: கவிதை என்னுடைய சொந்த படைப்பு. என்னுடைய சொந்த படைப்பில் வேறுயாரும் குறுக்கிடுவதற்கு இடம் கிடையாது. ஆனால், என்னுடைய பாடலில் பிறர் கைவைப்பதை நான் அனுமதித்தாக வேண்டும். அதுதான் பாடலாசிரியன் என்கிற பணிக்கு நான் செய்கிற மரியாதை. கவிதை என்பது ஒரு கவிஞனுடைய சுதந்திர மலர்ச்சி. ஆனால், திரைப்பாடல் என்பது பலபேருடைய கூட்டு முயற்சி. திரைப்படப் பாடல் […]