க்ரைம்

கோவில் நிலங்கள் தொடர்ந்து அபகரிக்கப்படுகிறதா?

செய்தி :    பழனி கோவில் விவகாரத்தைத் தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலின் 60 கோடி ரூபாய் நில மோசடியில் தாசில்தார், சார்பதிவாளர்கள் உட்பட 19 பேர் மீது வழக்குப்பதிவு! கோவிந்த் கமெண்ட் :  தமிழ்நாடு முழுக்க இருக்கிற ஆயிரக்கணக்கான கோவில்களுக்கு எவ்வளவோ சொத்துக்கள் இருக்கின்றன. நிலங்களும் இருக்கின்றன. இவற்றில் கோவில் சிலைகளும் கடத்தப்பட்டிருக்கின்றன. கோவில் நிலங்கள் அபகரிக்கப்படுவதாக நீண்ட காலமாகவே குற்றச்சாட்டுகளும் எழுந்திருக்கின்றன. இந்நிலையில், தற்போது பழனியைத் தொடர்ந்து மதுரையிலும் நில அபகரிப்புப் புகார்கள் வெளிவந்திருக்கின்றன. […]

வடமாநிலக் குடும்பத்திற்கு இப்படியொரு கொடுமை!

இதுபோன்ற நிகழ்வுகள் வடமாநிலத்தில் குறிப்பாக பீகாரில் எத்தகைய அதிர்ச்சியை உருவாக்கும் என்பதையெல்லாம் இந்த சமயத்தில் நினைவில்கொள்ள வேண்டியிருக்கிறது.

நிதியமைச்சரின் பெயரிலேயே இப்படியொரு மோசடி!

செய்தி : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுவது போல ஏ.ஐ. வீடியோ அனுப்பி, தொழிலதிபர்களிடம் ரூ. 17 லட்சம் மோசடி. – சைபர் க்ரைம் போலீஸ் விசாரணை கோவிந்த் கமெண்ட்: தற்போது பரவலாகி வருகிற ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிதியமைச்சர் கேட்பதாகவே வடிவமைத்து, நம்பவும் வைத்து, 17 லட்சம் ரூபாயை மோசடி பண்ண முடிகிறதென்றால், நவீனத் தொழில்நுட்பப் புற்றிலிருந்து இன்னும் எத்தனை எத்தனை பாம்புகள் வெளிவருமோ தெரியவில்லை!

சமூக வலைத்தளங்களுக்கு மேலும் நெருக்கடியா?

மக்களின் குரல் வெளிப்படுவது ஆட்சியாளர்கள் மூலமாக மட்டுமல்ல. சமூக வலைத்தளங்களிலும் அவை வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அந்தக் குரலை கட்டுப்படுத்த முனைவது, உண்மையைப் பிரதிபலிக்கின்ற மக்களின் வாயைக் கட்டிப் போடுவதற்கு சமமான ஒன்றுதான்.

ஜீபே மூலம் நடக்கும் நவீனக் கொள்ளை!

செய்தி: சென்னையில் பரவி வரும் புதிய கொள்ளைக் கலாச்சாரம் – ஜீபே மூலம் பணம் பறிக்கும் கும்பல். கோவிந்த் கமெண்ட்: பணமதிப்பிழப்பிற்கு பிறகு ஜீபே, பே.டி.எம் என்று செல்போனில் உள்ள நவீன தொழில்நுட்ப வசதி மூலம் பணம் அனுப்புவதை ஊக்குவித்தது மத்திய அரசு. அப்போதே ஏ.டி.எம் கார்டை முறைகேடாக பயன்படுத்தி, ஏ.டி.எம் மையங்களில் ஒரு கும்பல் திருடுகிறது என்று அடுத்தடுத்து செய்திகள் வெளி வந்தன. இருந்தாலும் இன்றுவரை அந்தவிதமான ஏ.டி.எம் கொள்ளைகள் நின்றபாடாக இல்லை. தற்போது ஜீபே, […]

தர்மசாலாவில் இப்படியா?

நம்ம ஊர் பழனி மாதிரி கர்நாடகாவில் பக்தர்கள் அதிகமாகச் செல்லும் இடங்களில் ஒன்று, தர்மசாலா. கர்நாடகாவைக் கடந்து அங்கு பிற மாநில பக்தர்கள் செல்வது அதிகம். இந்த நிலையில் அங்கு பணியாற்றிய துப்புரவுப் பணியாளர் ஒருவர் பொதுவெளியில் தெரிவித்திருக்கும் சில சம்பவங்கள் பலரையும் கதிகலங்க வைத்திருக்கின்றன. பல பெண்கள் உயிரிழந்த நிலையில் கொண்டுவரப்பட்டு, தான் அதை புதைக்க நேர்ந்த அவலத்தை அவர் தெரிவித்திருக்கிறார். இது கர்நாடகாவை மட்டுமல்ல, இந்தியாவின் பல மாநிலங்களிலும் உள்ள பக்தர்களை அதிர வைத்திருக்கிறது. இப்படி […]