ராமருக்கு ஏன் இந்த சோதனைகள்?
செய்தி: ராமர் கோயிலில் திருடப்பட்ட காணிக்கைகளை மீட்க தீவிரம்! – குற்றவாளிகளின் சட்டவிரோத சொத்துக்கள் மீது புல்டோசர் நடவடிக்கை எடுக்க உ.பி. அரசு முடிவு. கோவிந்த் கமெண்ட்: ராமாயணத்தில்தான் ராமனுக்கு வில்லன்கள் இருந்தனர். தற்போது பார்த்தால், ராமர் கோவிலுக்கு உள்ளேயே புது வில்லன்கள் உருவாகி, அதுவும் கோவில் வளாகத்துக்குள்ளேயே கொள்ளை அடித்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.
கல்வியும் இயற்கை அழகும் இணைந்த மலை மாநிலம்!
இந்தியாவில் அதிக எழுத்தறிவு பெற்ற மாநிலமாக கேரளா நீண்ட காலமாக அறியப்பட்டது. ஆனால், சமீபத்திய ULLAS திட்டத்தின் அடிப்படையில் மிசோரம் முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலம் இன்று நாட்டிலேயே அதிக கல்வியறிவு கொண்ட மாநிலமாக மாறியுள்ளது. இயற்கையும், கல்வி சாதனையும் ஒன்றாக இணைந்த இந்த மாநிலத்தின் கதை மிகவும் சுவாரசியமானது. இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மிசோரத்தின் பெரும்பகுதி அடர்ந்த காடுகளால் சூழப்பட்டுள்ளது. உயரமான மலைகள், அழகான பள்ளத்தாக்குகள் மற்றும் இயற்கை எழில் […]
மேகதாது அணை – கர்நாடக முதல்வரின் அறிவிப்பு!
செய்தி: மேகதாது அணைத் திட்டம் குறித்து தமிழக முதல்வர் விஜய்யுடன் பேசத் தயார்! – கர்நாடக முதர்வர் டி.கே.சிவகுமார் கோவிந்த் கமெண்ட்: இதே மேகதாது அணை கட்டுவது பற்றி கர்நாடகத்திலிருந்த எத்தனையோ முதர்வர்கள் தொடர்ந்து பேசியிருக்கிறார்கள். அதை எதிர்த்து தமிழ்நாட்டில், முதலமைச்சராக பொறுப்பிலிருந்தவர்கள் இதுவரை தொடர்ந்து எதிர்த்திருக்கிறார்கள். இப்போது கர்நாடக முதல்வரான டி.கே.சிவகுமார் தமிழக முதல்வரான விஜய்யிடம் புதிதாக என்ன பேசிவிடப் போகிறார்?
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பயிற்சி!
சட்டமன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சிக் கல்லூரி ஒன்று தமிழகத்தில் உருவாக்க வேண்டும். இது அடிப்படையான தேவை. இந்தத் தேவை தமிழகத்திற்கு மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியாவிற்கே தேவை.
இளைஞர்களுக்கு வலுவூட்டுவது யார்?
செய்தி: வலுவூட்டப்பட்ட இளைஞர்களே வளர்ச்சியடைந்த பாரதத்தின் உந்து சக்தி. – நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு கோவிந்த் கமெண்ட்: வலுவான இளைஞர்களின் மூலம் பிரதமர் மோடி சொல்வது மாதிரி இந்தியா வலுவாக மாறலாம் தான். ஆனால், இளைஞர்களுக்கு வலுவூட்டுவது யார்? வேலையின்மையால் கோடிக்கணக்கான இளைஞர்கள் பரிதவிக்கும்போது, அவர்களுக்கு கரப்பான் பூச்சி என்கின்ற அடைமொழியைக் கொடுக்கிறார். அந்தக் கரப்பான் பூச்சிகள் வலுவாக ஒன்று சேர்ந்தால், அதற்கு தடைவிதிக்கிறார். மேற்காசியப் போரினால் மேலும் மேலும் வேலைகளை இழந்து […]
PMUY மானிய விலை சிலிண்டர் இனி 4 மட்டுமே!
மத்திய அரசு, பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் மானிய விலையில் கொடுக்கப்படும் எல்பிஜி சிலிண்டர்களின் எண்ணிக்கையை வருடத்திற்கு 9-லிருந்து 4 ஆகக் குறைத்திருக்கிறது. குடும்பங்களின் சராசரி ஆண்டு எரிவாயு நுகர்வை அடிப்படையாகக் கொண்டு மானியச் செலவினத்தை சீரமைப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது. வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.29 உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, இப்போது இந்த புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த புதிய விதிமுறை நாடு […]