அரிய புகைப்படங்கள்

மெல்லிசை மன்னருக்குப் பிடித்தமான சந்திரபாபு!

மெல்லிசை மன்னர் விஸ்வநாதனுக்குப் பிடித்தமானவர் நடிகர் சந்திரபாபு. தான் இறந்தால் தன்னுடைய உடலை மெல்லிசை மன்னரின் வீட்டில் வைத்துவிட்டு அடக்கம் செய்ய விரும்பியிருக்கிறார். அவருடைய விருப்பம் நிறைவேற்றப் பட்டது.

சந்திரபாபு பாடல்களின் தனித்துவம்!

கலைவாணருக்கு அடுத்து நகைச்சுவை நடிகர்களில் பாடி, நடிக்கக் கூடியவர் சந்திரபாபு. துவக்கக் காலப் படங்களில் இருந்தே பாடி நடித்திருக்கிற சந்திரபாபு, “பம்பரக் கண்ணாலே” போன்ற ஜாலியான காதல் பாடல்களையும் பாடியிருக்கிறார்.

கோலாகலமாக நடந்த நடிகர் திலகம் இல்லத் திருமண விழா!

திரளான திரை நட்சத்திரங்கள் திரண்ட திருமண வரவேற்பின்போது சென்னையில் பலத்த மழை. அதற்கிடையில் சிறப்பாக நடந்திருக்கிறது நடிகர் திலகம் இல்லத் திருமண விழா.

மூன்று முதல்வர்களுடன் சிறு குழந்தையாக…!

அருமை நிழல்:  மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை வைத்துப் பல திரைப்படங்களை எடுத்தவர் ஆர்.எம்.வீரப்பன். அதோடு, ‘தெய்வத் தாய்’, ‘காவல்காரன்’ எனப் பல படங்களைத் தயாரித்தவர். அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உள்ளிட்ட மூன்று தமிழக முன்னாள் முதல்வர்கள் மற்றும் இயக்குநர் ப.நீலகண்டன் ஆகியோருடன் சிறு குழந்தையாக காட்சியளிப்பவர் எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகளும், சென்னை ராமாபுரத்தில் செயல்பட்டு வரும் டாக்டர் எம்.ஜி.ஆர் காது கேளாதோர் மற்றும் வாய்பேச முடியாத மாணவர்களுக்கான சிறப்புப் பள்ளியின் தாளாளருமான கலைமாமணி டாக்டர்.லதா ராஜேந்திரன். […]

குழந்தைப் பருவத்திலேயே பல ஸ்டார்களுடன் கமல்!

‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் ஜெமினி, சாவித்ரியுடன் சேர்ந்து நடித்த கமலுக்கு எம்.ஜி.ஆர், சிவாஜியுடன், எஸ்.எஸ்.ஆர் என்று அந்தக்காலத்திய பல முன்னணி ஸ்டார்களுடனும் இணைந்து நடிக்கிற வாய்ப்பு கிடைத்தது. அவ்வை சண்முகத்தின் நாடகக்குழுவில் இணைந்து நடித்து அதன் மூலம் கிடைத்த பயிற்சி என்று கமலுக்கு இளம் வயதிலேயே அருமையான நடிப்புச் சூழல் ! தன்னுடைய முதல் படத்தில் “அம்மாவும் நீயே.. அப்பாவும் நீயே” என்ற பாடலை கமலுக்குப் பின்னணி பாடியவரான எம்.எஸ்.ராஜேஸ்வரி பின்னாளில்- மணிரத்னத்தின் இயக்கத்தில் கமல் நடித்த […]

வளரும் ஸ்டார்கள்!

அருமை நிழல்:  * தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிற சூர்யாவும், கார்த்தியும் இளம் வயதில் – சந்தோஷமானதொரு தருணத்தில்!