ஜானகி அம்மையார் திருமதி எம்.ஜி.ஆரான நாள்!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கும், ‘தோட்டத்தம்மா’ என்று பாசத்தோடு அழைக்கப்படும் ஜானகி அம்மையாருக்கும் 1962-ஆம் ஆண்டு இதே நாளில் (ஜூன் 14) திருமணம் நடைபெற்றது.

பொன்மனச் செம்மலின் சினிமா, அரசியல் மற்றும் பொது வாழ்வில் உறுதுணையாக இருந்த ஜானகி அம்மையார், புரட்சித் தலைவரின் வாழ்நாள் இறுதி வரை அவரது நிழலாக இருந்து கவனித்துக் கொண்டார்.

மக்கள் திலகம்-ஜானகி அம்மையாருக்கும் திருமணம் நடைபெற்று 62 ஆண்டுகள் கடந்துவிட்டது. இந்தநிலையில், அவர்களது திருமண நாளை மக்கள் திலகத்தின் தொண்டர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்!

You might also like