வாசிப்பின் ருசி:
நமக்கு எப்போது வயதாகத் தொடங்குகிறது? பொதுவாக 65 வயதையொட்டி, மருத்துவத் தேவைகள் அவசியாகும்போது, நமக்கு முதுமை வரத் தொடங்குகிறது என சமூகம் கருதுகிறது.
ஆனால், பிறந்தது முதலே நமக்கு வயதாக ஆரம்பித்துவிடுகிறது. இப்போதுகூட வயதாகிக் கொண்டுதான் இருக்கிறது, நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக அதை உணர்கிறோம்.
நாம் எல்லோருமே நம் வயதைவிட இளமையாகத்தான் உணர்கிறோம். ஏனென்றால் உணர்வுக்கு வயதாவதில்லை.
– இஸபெல் அலெண்டே (லத்தின் அமெரிக்க எழுத்தாளர்)