இந்தியாவில் கணவன் இறந்தபிறகு மனைவி எல்லா ஆபரணங்களையும் கலைத்துவிட வேண்டும். குறிப்பாக வங்காளத்தில் மனைவி வண்ண உடைகளைக் கூட உடுத்தக் கூடாது. வெள்ளாடை தான் உடுத்த வேண்டும். எந்த ஆபரணமும் அணியக் கூடாது போன்ற விதிகள் கடுமையாக இருந்தன.
ராமகிருஷ்ணர் இறக்கும்போது அவருடைய மனைவி சாரதா கேட்டார், “நீங்கள் இறந்த பின் நான் என்ன செய்வது?”. நானும் வெள்ளைப் புடவை உடுத்தி, நகைகளை கலைந்து விடவா?” என்று கேட்கிறார்.
ராமகிருஷ்ணர் சொன்னார், “நான் எங்கேயும் போய்விடப் போவதில்லையே. இங்கேதான் இருப்பேன். என் மீது பிரியம் வைத்திருப்பவர்கள் கண்களில் என்னை பார்க்கலாம்…
என்னை இந்த காற்றில் உணர்வாய்…
இந்த மழையில் உணர்வாய்….
இந்த வெய்யிலில் உணர்வாய்….
சிறகடித்து ஒரு பறவை பறக்கும் போது திடீரென என்னை உணர்ந்து கொள்வாய். நான் தான் அங்கே இருக்கிறேனே…
அழகாக சூரியன் மறையும்போது என்னை உணர்ந்து கொள்வாய். நான் அங்கிருப்பேன்…
நீ விதவை அல்ல, என்றென்றைக்கும் சுமங்கலி.
இந்தத் திருமணம் கால வர்த்தமானதுக்கு கட்டுப்பட்டது அல்ல. நித்திய திருமணம்…”
ராமகிருஷ்ணர் ஒரு பக்தனுக்கும், குருவுக்கும் நடக்கும் திருமணத்தைப் பற்றி பேசுகிறார்.
சாரதா ஒரு பக்தை, அவருடைய மனைவி அல்ல. மனைவியாக இருந்தார் என்பது இரண்டாம் பட்சம்.
அப்படித்தான் நடந்தது ராமகிருஷ்ணரின் மரணம்.
சாரதா அழ கூட இல்லை. அவர் இருந்தபோது எப்படி வாழ்ந்தாரோ, அப்படியே வாழ்ந்திருந்தார்.
– நன்றி : முகநூல் பதிவு.