மதுரையில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்கூட்டம் முடிந்து வீட்டிற்கு வந்தேன். ஆனால், ஒரு விஷயம் எனை பாதித்தது.
தோழர் பிரகாஷ் காரத்தும் – பிருந்தா காரத்தும் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் ஓய்வு பெற்று விட்டார்களே?. இனி, கட்சிக்குள், அரசியலில், சொந்த வாழ்வில் அவர்களது நிலை என்ன?!
தங்கள் வாழ்வை கட்சிக்காக, இந்தியப் புரட்சிக்காக அர்ப்பணித்த இணையர்கள். நமக்கென்று குழந்தைகள் வேண்டாம் என்று முடிவு செய்துகொண்டு காதல் மணம் செய்த தம்பதி தோழர்களாயிற்றே!
இப்போது அவர்கள் ஒரு பொறுப்பிலும் இல்லை. இருவரையும் எங்கள் கட்சி தான் பராமரிக்க வேண்டும். இருவருக்கும் கையகல நிலமில்லை, சொந்த வீடில்லை, பெற்ற பிள்ளைகள் இல்லை. இப்போது பதவிகளும் இல்லை.
இயல்பாக
விடைபெறுதலை
எங்களுக்கு
எங்கள் தோழர்கள் தான்
கற்றுக் கொடுத்தார்கள்…
அந்த தோழர்களின் பெயர்
பிருந்தாகாரத் – பிரகாஷ்காரத்
எங்களுக்கு நீங்கள் இருக்கிறீர்கள்;
உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம்
இந்த நாடு இருக்கிறது
இந்த நாட்டில்
தொழிலாளி வர்க்கம் இருக்கிறது!
லால் சலாம் காம்ரேட்ஸ்….
இன்குலாப் ஜிந்தாபாத்….