யாருக்கு என்ன தேவை என்பதை உணர்ந்தவர் கலைவாணர் என்.எஸ்.கே!

படித்ததில் ரசித்தது:

‘ரங்கோன் ராதா’ படத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் வைத்தியராக வருவார். அப்போது பசியின் கொடுமையைப் பற்றி உணர்வுபூர்வமாக ஒரு காட்சியில் விளக்கியிருப்பார். 

நோயாளி:-

அய்யா, இரண்டு நாளா வயத்தை வலிக்கிறது மருந்து கொடுங்கள்.

என்எஸ்கே கலைவாணர்:-

 (மருந்து கொடுத்து) இரண்டு நாள் சாப்பாட்டுக்கு பின் சாப்பிடு, சரியாகிவிடும்.

நோயாளி:-

சாப்பிட்டே இரண்டு நாள் ஆகிவிட்டது அய்யா!!!

என்எஸ்கே கலைவாணர்:-

மருந்தை திரும்பி வாங்கிவிட்டு, அவருக்குப் பணம் கொடுத்து விட்டு, முதலில் போய் சாப்பிடு… வயித்துவலி சரியாகிவிடும்… அது தான் உனக்கு மருந்து என்று சொல்வார்!

திரையில் மட்டுமல்ல, நிஜத்திலும் பசியின் கொடுமையை நன்கு உணர்ந்தவர் தான் கலைவாணர்.

நன்றி: என்.எஸ்.கே. நல்லதம்பி முகநூல் பதிவு

You might also like