நதி கடலில் கலப்பதென்பது காணாமல் போவதல்ல!

வாசிப்பின் ருசி:
கடலில் கலக்கும் முன் ஒரு நதி அச்சத்தில் நடுங்குவாள் என்று சொல்லப்படுகிறது. மலைச் சிகரங்களையும், காடுகளையும் கிராமங்களையும் கடந்து வளைந்து நெளிந்து செல்லும் தன் பாதையைத் திரும்பிப் பார்க்கிறாள்.
முன்னால் பரந்து விரிந்து கிடக்கும் கடலில் நுழைவது என்றென்றைக்கும் காணாமல் போவது போலத்தான். ஆனால் வேறு வழியில்லை. நதி திரும்பிச் செல்ல முடியாது. யாருமே வாழ்க்கையில் திரும்பிச் செல்வது சாத்தியமே இல்லை.
கடலில் நுழையும் அபாயத்தை நதி தேர்ந்தெடுத்துதான் ஆக வேண்டும். ஏனெனில், அப்போதுதான அச்சம் மறையும்; ஏனெனில், கடலில் நுழைவது காணாமல் போவதல்ல, அது கடலாக மாறுவது என அப்போதுதான் நதிக்குத் தெரியும்.
— கலீல் ஜிப்ரான்
நன்றி: ஆர். விஜயசங்கர்
You might also like