பாரதி உண்மையில் ஒரு வழுக்கைத் தலையர் என்பது பலருக்குத் தெரியாது. சுதேசமித்திரன் இதழில் பாரதி வழுக்கை தலையராகக் காட்டப்பட்டிருக்கிறார். அவருடன் இருப்பவர் பாரதியின் ஞானகுரு குள்ளச்சாமி.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி பாரதியும் குள்ளச்சாமியும் எப்படி போதை மருந்து பயன்படுத்தினார்கள் என்று எழுதி இருக்கிறார். இரவு தூங்குவதற்கு முன் பாரதியும் குள்ளச்சாமியும் எலுமிச்சம் அளவு லேகியம் ஒன்றை எடுத்து வாயில் போட்டுக் கொள்கின்றனர்.
அது என்ன என்று வ.உ.சி கேட்டதற்கு, “மோட்சத்துக்குக் கொண்டு போகும் மருந்து” என்று சொல்லி இருக்கிறார்கள். “அடப்பாவி எலுமிச்சம் பழம் அளவா?” என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு பாரதி “உனக்கு பயந்து தான் குறைவாக எடுத்துக் கொள்கிறோம்” என்று சொல்லி இருக்கிறார்.
– பாரதி ஆய்வாளர் ய. மணிகண்டன் தொகுத்த ‘பாரதியும் குள்ளச்சாமியும்’ நூலில் இருந்து..
யார் இந்த குள்ளச்சாமி?
புதுச்சேரித் தெருக்களில் பித்தனைப் போல் திரிந்த ஒரு பரதேசியும் மகாகவி பாரதிக்கு ஞானகுரு. அவர்தான் குள்ளச்சாமி என்னும் மாங்கொட்டைச்சாமி. பாரதிக்கும் குள்ளச்சாமிக்குமான உறவு ஆழமானது; அற்புத நிகழ்வுகளின் அடுக்குகளைக் கொண்டது. பாரதியின் நேரடி வாழ்வில், கவிதைகளில், உரைநடை எழுத்துகளில், சொற்பொழிவு நிகழ்ச்சியில் குள்ளச்சாமி பெற்றுள்ள இடம் தனித்துக் குறிப்பிடத்தக்கதாகும்.
#கப்பலோட்டிய_தமிழன் #வஉசி #மகாகவி_பாரதி #பாரதி #குள்ளச்சாமி #மகாகவி_பாரதி #bharathiyum_kullachamium_book #voc #bharathi #kullachami #பாரதியும்_குள்ளச்சாமி_நூல்