எதையும் சரி செய்யும் ஆற்றல் ஆழ்மனதிற்கு உண்டு!

ஜோசப் மர்ஃபியின் வெற்றிமொழிகள்

டாக்டர் ஜோசப் மர்ஃபி சர்வதேச அளவில் பெரிதும் மதிக்கப்படுகிற நூலாசிரியர். உலகத் தத்துவங்களைப் பல்லாண்டு காலம் ஆய்வு செய்த அவர், நம் ஒவ்வொருவரின் ஆழ்மனத்திற்குள்ளும் ஓர் அற்புதமான சக்தி ஒளிந்து கிடக்கிறது என்கிறார்.

புதையற்களஞ்சியம் உங்களுக்குள்தான் இருக்கிறது. உங்கள் இதயத்தின் விருப்பத்திற்கான விடையை உங்களுக்குள் தேடுங்கள்.

கடந்த காலத்தில் வாழ்ந்துவந்த மாபெரும் மனிதர்கள், தங்கள் ஆழ்மனத்தைத் தொடர்புகொண்டு அதன் சக்தியை விடுவிக்கும் ரகசியத்தை அறிந்திருந்தனர். உங்களாலும் அதைச் செய்யமுடியும்.

ஒவ்வோர் எண்ணமும் ஒரு காரணம், ஒவ்வொரு சூழ்நிலையும் ஒரு விளைவு.

எண்ணங்களை மாற்றுங்கள், உங்கள் தலைவிதியையே மாற்றி அமைத்துவிடலாம்.

இதனை வாங்கும் பண வசதி எனக்கு இல்லை, என்னால் இதைச் செய்யமுடியாது என்பன போன்ற சொற்றொடர்களை ஒருபோதும் பயன்படுத்தாதீர்கள்.

நல்லவற்றை நினையுங்கள், நல்லவை மலரும். நாள் முழுதும் எதை நினைக்கிறீர்களோ நீங்கள் அதுவாகவே ஆகிவிடுகிறீர்கள்.

தேர்ந்தெடுக்கும் சக்தி உங்களிடம் உள்ளது. ஆரோக்கியத்தையும் ஆனந்தத்தையும் தேர்ந்தெடுங்கள். நட்பாக இருப்பதைத் தேர்வு செய்யுங்கள்.

உங்களுக்குத் துன்பம் விளைவிக்கும் சக்தி பிறருடைய தூண்டுதல்களுக்குக் கிடையாது. உங்கள் எண்ண ஓட்டத்திற்குத்தான் அச்சக்தி உண்டு. மற்றவர்களின் எண்ணங்களையும் பேச்சுகளையும் நிராகரிக்க வேண்டும்.

என்னால் முடியாது என்று ஒருபோதும் கூறாதீர்கள். பின்வரும் வாக்கியத்தின் மூலம் அப்பயத்திலிருந்து விடுபடுங்கள். என் சொந்த ஆழ்மனத்தின் சக்தி கொண்டு என்னால் எல்லாவற்றையும் செய்யமுடியும்.

குணமாக்கும் சக்தி உங்கள் ஆழ்மனத்தில் உள்ளது என்பதை உங்களுக்கு நீங்களே பலமுறை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

எல்லா நோய்களும் நம் மனத்தில்தான் உருவாகின்றன. நம் மனத்தில் அதற்கான எண்ண ஓட்டம் இல்லாமல், நம் உடலில் எதுவுமே ஏற்படுவதில்லை.

செல்வந்தராக இருப்பது உங்கள் உரிமை என்று தைரியமாகக் கூறுங்கள். உங்கள் ஆழ்மனம் உங்கள் பிரகடனத்திற்கு மதிப்பளிக்கும்.

பணம் உங்கள் வாழ்க்கையில் தங்குதடையின்றி புழங்கிக்கொண்டிருந்தால், நீங்கள் பொருளாதாரரீதியாக ஆரோக்கியமாக இருக்கிறீர்கள்.

நீங்கள் இங்கு ஒரு மோசமான சூழலில் உழல்வதற்கோ, கந்தல் ஆடைகளுடன் அலைவதற்கோ அல்லது பட்டினி கிடப்பதற்கோ வரவில்லை. நீங்கள் செழிப்பான வாழ்க்கை வாழ்வதற்கே இங்கு வந்துள்ளீர்கள்.

எந்த தோல்வியில் இருந்தும் உங்களால் வெற்றிகரமாக மேல் எழுந்து வந்து, உங்கள் ஆழ்மனத்தின் அற்புதமான சக்தியின் மூலம் உங்கள் இதயத்தின் இதமான விருப்பங்களை நிறைவேற்றமுடியும்.

நீங்கள் மகிழ்ச்சியைத் தேர்ந்தெடுக்கவேண்டும். மகிழ்ச்சி என்பது ஒரு பழக்கம். அடிக்கடிச் சிந்திக்கவேண்டிய ஒரு பழக்கம்.

உங்களுக்குக் கிடைத்துள்ள அனைத்து ஆசீர்வாதங்களுக்காகவும் ஒரு நாளில் பலமுறை நன்றி கூறுங்கள்.

நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க உண்மையாகவே விரும்பவேண்டும். விருப்பம் இன்றி எதுவும் சாதிக்கப்படுவதில்லை.

தொகுப்பு – தான்யா

You might also like