வாழ்வை வளப்படுத்தும் எண்ணங்கள்!

வாசிப்பின் ருசி:

உலகில் மனிதர்கள் எங்கே வாழ்ந்தாலும் நம் அனைவருக்கும் இருக்கும் அடிப்படை உள்ளுணர்வு (basic consciousness) என்பது ஒன்றே.

நம்மைப்போல் மற்றவர்களுக்கும் கோபம், தனிமை, கவலை போன்ற உணர்வுகள் இருப்பதனால், நாம் அனைவரும் உள்ளுணர்வால் ஒன்றாகிறோம்.

அதனால் நாம் தான் உலகம் என்னும் உண்மையை உணர்தல் மிகவும் முக்கியம். ஏனென்றால், ஒரு தனி மனிதன் கொள்ளும் வன்முறை எண்ணமும், காழ்ப்புணர்ச்சியும், வெறுப்பும், பிரிவினைவாதமும் இங்கு யாவர்க்கும் பொதுவாக இருக்கும் உள்ளுணர்வில் சென்று கலந்து அதை மாசுபடுத்தி விடுகிறது.

அதேபோல், நம் மனத்தில் உதிக்கும் ஒவ்வொரு நல்ல எண்ணமும் அந்த உள்ளுணர்வுக் கடலில் (Sea of consciousness) சென்று சேர்ந்து அதை வளப்படுத்துகிறது.

எனவே, இந்த பொது உள்ளுணர்வை மாசுபடுத்தாமல் காப்பதற்கு ஒவ்வொரு மனிதனும் பொறுப்பாளி ஆகிறான்.

– ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி

#basic_consciousness #Sea_of_consciousness #மனிதர்கள் #அடிப்படை_உள்ளுணர்வு #எண்ணம் #ஜிட்டு_கிருஷ்ணமூர்த்தி #j_k #j_krishnamoorthy #human

You might also like