“நிலாவே வா செல்லாதே வா
எந்நாளும் உன் பொன்வானம் நான்…
எனை நீ தான் பிரிந்தாலும்
நினைவாலே அணைப்பேன்…”
சமீபத்தில் ஜீ தமிழ் டிவியில் நடக்கும் ‘சரிகமப’ நிகழ்வில் எஸ்.பி.பி.சரண் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஒரு எபிசோடில் “நிலாவே வா செல்லாதே வா” பாடலை பாடும் நிலா எஸ்.பி.பி அவர்கள் பாடிய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
“இந்த பாடல் ரெக்கார்டிங் சமயத்தில், என்ன சிச்சுவேசன் என்று சொல்ல, ராஜா சாரோ, இயக்குனர், உதவி இயக்குனர்கள் என யாருமே இல்லை.
அப்பா ஸ்டுடியோவுக்கு போனவுடன் சுந்தர்ராஜன் அண்ணன் இந்தப் பாடலை சொல்லிக் கொடுத்து, பின் பிராக்டிஸ் பண்ணி ரெக்கார்டிங்கும் முடிஞ்சுது.
படம் பார்க்கும் போதுதான் அப்பாவுக்கு புரிந்தது இந்தப் பாடல் ஒரு சோகமான சிச்சுவேசனுக்கானது என்று.
இது பற்றி அப்பா “நான் இது ஒரு நல்ல ரொமாண்டிக் சாங்னு தான் நெனைச்சேன். அதனால இந்தப் பாடலை நான் சிரிச்சிகிட்டு தான் பாடினேன்.
இது சோகப்பாடல்னு சொல்லி இருந்தா வேற மாதிரி பாடி இருப்பேன்.“ என்றார். இப்ப இந்த பாடலை கேட்டால் புரியும். ராஜா சாரும் இந்த பாடலை ஓகே பண்ணிட்டார்”
ரெக்கார்ட் வந்து இந்தப் பாடலை கேட்ட சமயத்தில், பாடும் நிலா பாடிய “நான் பாடும் மௌன ராகம், வானுயர்ந்த சோலையிலே” போன்ற சோகப் பாடலை போல இந்த பாடலில் அவ்வளவாக சோகம் இல்லாததை உணர முடிந்தது.
ஆனால், படத்துடன் பார்க்கும் போதும், கவிஞர் வாலியின் அந்த வலிகளான வரிகளை உணரும் போதும் மட்டுமே இது சோகப் பாடல் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.
“அம்மாடியோ நீ தான்
இன்னும் சிறு பிள்ளை…
தாங்காதம்மா நெஞ்சம்
நீயும் சொன்ன சொல்லை….
பூந்தேனே நீ தானே
சொல்லில் வைத்தாய் முள்ளை…”
- நன்றி : முகநூல் பதிவு