வியப்பூட்டிய ‘திசையெட்டும் மொழியாக்க விருது’ விழா!

கடந்த ஞாயிறு 29.09.2024 “நல்லி – திசையெட்டும் மொழியாக்க விருது” விழா மயிலாப்பூரில் மிகச்சிறப்பாக நடந்தேறியது.

இலக்கிய ஆளுமைகள் பொன்னீலன், குறிஞ்சிவேலன், வண்ணநிலவன், கனவு சுப்ர பாரதிமணியன், க்ருஷாங்கனி, கண்ணையன் தட்சிணாமூர்த்தி, எஸ்ஸார்சி, ராம் தங்கம் இவர்களுடன் விருதாளர்கள் சமயவேல், எம்.டி. முத்துக்குமாரசாமி, ப்ரியதர்ஷினி, க. மூர்த்தி என்று பலர் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

உண்மையிலேயே இலக்கிய விழாவில் அரங்கு நிறைந்த கூட்டம்.

தமிழ்வெளி வெளியீடுகளான ‘கருமை’ – ஜமைக்கா கின்கெய்ட்டின் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பிற்காகச் சமயவேல், ‘நீ ஏன் குதிரையைத் தனியாக விட்டாய்’ – மஹ்மூத் தர்வீஷ் கவிதைகள் மொழிபெயர்ப்பிற்காக எம்.டி. முத்துக்குமாரசாமி ஆகியோர் விருது பெற்றார்கள்.

இவ்விரு நூல்களைப் பதிப்பித்தற்காகத் தமிழ்வெளி வெளியீட்டிற்கும் விருது கிடைத்தது. மகிழ்ச்சியான தருணங்கள். உங்களோடு பகிர்துகொள்வதில் மேலும் மகிழ்ச்சி…

நல்லி – திசையெட்டும் மொழியாக்க விருது கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் இலக்கிய உலகில் மொழிபெயர்ப்பு சார்ந்து மிகமிக முக்கியமானா விருதாக இருந்து வருவது அனைவரும் அறிந்ததே.

பொதுவாக எந்தவொரு விருதுக்குப் பின்னும் புத்தகங்களுக்குக் கிடைக்கிற வெளிச்சம் இவ்விரு புத்தகங்களுக்கும் தற்போது கிடைத்து வருவது மேன்மேலும் மகிழ்ச்சி.

– சுகன் கலாபன்

#திசையெட்டும்_மொழியாக்க_விருது #கருமை #நீ_ஏன்_குதிரையைத்_தனியாகவிட்டாய் #nee_yen_kuthiraiyai_thaniyaga_vittai #thisai_ettum_mozhikka_viruthu_vizha #karumai

You might also like