செய்தி:
சென்னையில் நடந்த விழா ஒன்றில் பேசிய தமிழக ஆளுநர், “தேசிய பாடத்திட்டத்தை ஒப்பிடும்போது, மாநிலப் பாடத்திட்டம் தரம் குறைந்ததாக இருக்கின்றது. இது போட்டித் தேர்வுகளுக்கு ஏற்றதல்ல. மாநிலப் பாடத்திட்டத்தில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து இடம்பெற வேண்டும்” என்று கூறியிருந்தார்.
ஆளுநரின் இந்தக் கருத்துக்கு, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் விளக்கமளித்திருந்தனர்.
அதில், “தமிழக கல்வித்திட்டம் தான் சிறந்தது. வேண்டுமென்றால் ஒரு குழு அமைத்து ஆய்வு செய்துவிட்டுப் பேசுங்கள்” என்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அமைச்சர்கள் பதிலளித்திருந்தனர்.
கோவிந்த் கேள்வி:
இப்படியே போனால், மத்திய அரசின் கல்வித் திட்டம் சிறந்ததா? மாநில அரசின் கல்வித் திட்டம் சிறந்ததா? என்று சிறப்புப் பட்டிமன்றமே நடக்கும் போலிருக்கிறதே!