கொட்டுக்காளியைத் தியேட்டரில் வெளியிடுவதா?

இயக்குநர் அமீர் பேச்சு

கொடைக்கானல் பகுதியில் உள்ள வெள்ளக்கெவி கிராம மக்களின் உண்மை சம்பவங்களை வைத்து கெவி என்ற படம் தமிழ் தயாளன் இயக்கத்தில் தயாராகி உள்ளது. ஆதவன், லீலா, ஜாக் குலின் சார்லஸ், கணேஷ், வினோத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பட நிகழ்ச்சியில் டைரக்டர் அமீர் பேசும்போது, “திரைப்படங்கள் பார்வையாளர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தினால் வெற்றி பெறும். வாழை படம் வெகு ஜன மக்களுக்கு நெருக்கமாக இருந்ததால் வரவேற்பை பெற்றது.

கொட்டுக்காளி திரைப்பட விழாவுக்காக எடுத்த படம். விருதுகளை பெற்ற அந்த படத்தை மற்ற படங்களுடன் தியேட்டர்களில் போட்டி போட வைப்பதே ஒரு வன்முறை. அப்படி திரையிடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை.

விருதுக்கான படங்களை தியேட்டரில் பார்த்துவிட்டு வருபவர்கள் கடுமையாக விமர்சிக்கிறார்கள். குத்துவேன் வெட்டுவேன் என்று பேசுகிறார்கள்.

நான் கொட்டுக்காளி படத்தை தயாரித்து இருந்தால் தியேட்டரில் வெளியிட்டு இருக்க மாட்டேன். அந்த படத்தை ஓ.டி.டிக்கு விற்று இருக்கலாம்.

வசதி இல்லாத கிராமத்தை வைத்து கெவி படம் எடுத்துள்ளனர். இந்த படம் வந்த பிறகாவது அந்த கிராமத்துக்கு வெளிச்சம் கிடைக்கட்டும்” என்றார்.

You might also like