வாசிப்பின் ருசி:
“நாம் ஜன்னல்களைத் திறந்து வைப்போம். அப்போதுதான் வெளியே மழை பெய்கிறதா வெயில் காய்கிறதா என்பது தெரியும்.
வெளியிலுள்ள நறுமணங்களும் பறவைகளின் பாடல்களும், அவதிப்படுவோரின் அழுகுரலும், நம்மை யாரோ வெளியிலிருந்து அழைக்கிறார்கள் என்ற உண்மையும் புலப்படும்.
வெளி உலகத்தைப் பற்றித் தெரிந்து கொண்டோமானால் இந்த மொத்த பிரபஞ்சத்தில் நமது இடம் எது என்பது தெளிவாகிவிடும்.”
– அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம் நூலுக்கு இந்திரன் எழுதிய முன்னுரையிலிருந்து.