மாநிலங்களுக்கு நிதி வழங்குவதில் ஒரே நாடு கொள்கை அமலாகாதா?

செய்தி: மத்திய பட்ஜெட் பற்றி மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் விமர்சனம்:

மத்திய அரசு தொடர்ந்து மேற்குவங்கத்தை எப்போதும் புறக்கணிக்கிறது. மத்திய அரசிடமிருந்து  நாங்கள் பெறவேண்டிய 1,71,000 கோடி பாக்கி உள்ளது. அவர்கள் எங்களுக்கு ஒரு பைசாவும் கொடுக்கவில்லை.

கோவிந்த் கேள்வி:

மற்ற எல்லாவற்றிலும் ஒரே நாடு ஒரே தேர்தல் என்கின்ற பரந்த மனப்பான்மையுடன் தேசிய மயமான அறிவிப்புகளெல்லாம் வந்து கொண்டிருக்கின்றன.

ஆனால், பட்ஜெட்டில் மட்டும் சில மாநிலங்களுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடும் சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

இதில் மட்டும் ஒன்றிய அரசின் ஒரே நாடு கொள்கை என்ன ஆச்சு?

You might also like