கவிஞனால் ரசிகனுக்கு அதிகபட்சம் என்ன கொடுத்துவிட முடியும்?

ஒரு கவிஞனால் அதிக பட்சம் எதை ஒரு ரசிகனுக்கு கொடுத்து விட முடியும்…?

வாழ்க்கையின் அத்தனை பாடங்களையும் சொல்லிக் கொடுக்க முடியும் என்பதை நிரூபித்த கவிஞர் நா.முத்துக்குமாரின் அழகிய வரிகளின் தொகுப்பு.

வாழ்க்கை

“இருட்டினிலே நீ நடக்கையிலே
உன் நிழலும் உன்னை விட்டு விலகி விடும்

நீ மட்டும் தான் இந்த உலகத்திலே
உனக்கு துணை என்று விளங்கி விடும்”

வலிகள்

“உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
விரல்கள் இன்று எங்கே
தோளில் சாய்ந்து கதைகள் பேச
முகமும் இல்லை இங்கே
முதல் கனவு முடிந்திடும் முன்னமே
தூக்கம் கலைந்ததே”

காதல்

“வெந்நீரில் நீ
குளிக்க விறகாகி தீ
குளிப்பேன் உதிரத்தில்
உன்னை கலப்பேன்”

பிரிவு

“அழகான நேரம்
அதை நீதான் கொடுத்தாய்
அழியாத சோகம் அதையும்
நீ தான் கொடுத்தாய் கண் தூங்கும்
நேரம் பாா்த்து கடவுள் வந்து போனது
போல் என் வாழ்வில் வந்தே ஆனாய்
ஏமாற்றம் தாங்கலையே பெண்ணை
நீ இல்லாமல் பூலோகம் இருட்டிடுதே”

தந்தை – மகள்

“அடி கோவில் எதற்கு?
தெய்வங்கள் எதற்கு?
உனது புன்னகை போதுமடி

இந்த மண்ணில்
இதுபோல் யாருமிங்கே ….
எங்கும் வாழவில்லை
என்று தோன்றுதடி”

தந்தை – மகன்

“தெய்வங்கள்
எல்லாம் தோற்றே
போகும் தந்தை அன்பின்
முன்னே தாலாட்டு பாடும்
தாயின் அன்பும் தந்தை
அன்பின் பின்னே”

தேடல்

“பறவையே எங்கு இருக்கிறாய்
பறக்கவே என்னை அழைக்கிறாய்
தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே”

கற்பனை

“கருப்பு வெள்ளை பூக்கள் உண்டா?
உன் கண்ணில் நான் கண்டேன்
உன் கண்கள்
வண்டை உண்ணும் பூக்கள் என்பேண்
உன் கண்கள்
வண்டை உண்ணும் பூக்கள் என்பேன்”

வெயில்

“மழை மட்டுமா அழகு சுடும்
வெயில் கூட ஒரு அழகு”

“வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே”

வாழ்வியல்

“வேப்பங்கொட்டை அடிச்சு வந்த ரத்தம் ரசிச்சோம்
வத்திக்குச்சி அடுக்கி கணக்கு பாடம் படிச்சோம்
தண்ணியில்லா ஆத்தில் கிட்டிப்புல்லு அடிச்சோம்
தண்டவாளம் மேல காசை வச்சு தொலைச்சோம்”

“ஏலே, ஆடு மாடு
மேல உள்ள பாசம்
வீட்டு ரேஷன் கார்டில் சேர்க்க சொல்லி கேட்கும்
வெறும் தண்ணி கேட்டா மோரு தரும் நேசம்
வெள்ளந்தி மனிதர்கள் வாசம்
மண்ணுஎங்கும் வீசும்
பாம்பட கிழவியின்
பச்சிலை மருந்துக்கு
பேயும் ஓடிப்போகுமா?
பங்காளி பக்கத்து வீட்டுக்கும்
சோ்த்து சமைக்கிற
அன்பு இங்கு வாழும்”

பக்தி

“நஞ்சினைப்போல
நெஞ்சுக்குள் இருக்கும்
குற்றம் கொல்கிறதே
என் தொண்டைக்குழியில்
உறுத்தும் முள்
ஏதோ சொல்கிறதே
நீ இருக்கும் இடந்தான்
எது அல்லா……………
அது மண்ணிக்கும் மனமே
யா அல்லா”

இப்படியாகச் சொல்லிக் கொண்டே போக ஆயிரம் பாடல்கள் உண்டு.. வரிகளில் வாழும் இயல்புக் கவிஞர் நா.முத்துக்குமாரின் புகழ் என்றும் மறையாது.

– நன்றி: பால சயந்தன் முகநூல்பதிவு

You might also like