படித்ததில் பிடித்தது:
”என்னைப் பற்றி எழுதும்போது சிலர் எழுத்தாளரும், செயற்பாட்டாளருமான அருந்ததி ராய் என்று எழுதுகிறார்கள்.
நான் ஏன் வெறும் எழுத்தாளர் கிடையாது? ஏனென்றால் எழுத்தாளர்கள் என்பவர்கள் பாதுகாப்பான எல்லைகளுக்குள் நின்று கொண்டு, தன்னுடைய நூல்களை நிறைய பிரதிகளை விற்பனை செய்யத் தெரிந்தவராக, எவரையுமே தொந்தரவு செய்யாத எழுத்துக்களுக்குச் சொந்தக்காரர்களாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
செயற்பாட்டாளர்கள் என்பவர்கள் எழுத்தாளர்கள் அல்லர். அவர்கள் ஒருவிதமான தனித்த வகையினர் என்னும் பொதுமனநிலை இருக்கிறது.
முத்திரை குத்துவதில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று நினைக்கிறேன். யாரையும் தொந்தரவு செய்யாத எழுத்து எதற்கு?”
– அருந்ததி ராய்