எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலை ஏன்?

நிதீஷும் சந்திரபாபுவும் ‘கிங் மேக்கர்கள்’!

மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது.

மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். எஞ்சிய 542 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது.

தேர்தலில் பாஜக தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணிக்கும், எதிர்க்கட்சிகளின் ’இந்தியா’ கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.

நாடு முழுவதும் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. மத்தியில் ஆட்சி அமைக்க 272 எம்.பி.க்களின் ஆதரவு தேவை.

அந்த பெரும்பான்மை எந்தக் கட்சிக்கும் கிடைக்கவில்லை.

பாஜக தனித்து 239 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க பாஜகவுக்கு இன்னும் 33 எம்.பி.க்கள் தேவை. கூட்டணிக் கட்சிகளுடன் சேர்த்து பாஜக கூட்டணி 291 இடங்களில் வாகை சூடியுள்ளது.

அதேபோல், காங்கிரஸ் தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி, தோழமை கட்சிகளுடன் சேர்ந்து 234 தொகுதிகளைப் பிடித்துள்ளது.

முக்கிய மாநிலங்களில் கட்சிகளுக்கு கிடைத்த இடங்கள் வருமாறு:

தமிழ்நாடு

மொத்த தொகுதிகள்—39
திமுக கூட்டணி -39
அதிமுக -0
பாஜக -0
நாம் தமிழர் -0

உத்தரப்பிரதேசம்

மொத்த தொகுதிகள்— 80
இந்தியா கூட்டணி -43
பாஜக கூட்டணி -36
மற்றவை -1
பகுஜன் சமாஜ் -0

மே.வங்காளம்

மொத்த தொகுதிகள்— 42
திரினாமூல் காங். — 29
பாஜக -12
காங்கிரஸ் -1

மகாராஷ்டிரா

மொத்த தொகுதிகள் — 48
இந்தியா – 30
பாஜக கூட்டணி -17
மற்றவை -1

பீகார்

மொத்த தொகுதிகள்— 40
பாஜக கூட்டணி -30
இந்தியா கூட்டணி – 9
மற்றவர்கள் -01

ஆந்திரா

மொத்த தொகுதிகள்— 25
பாஜக கூட்டணி -21
ஒய்.எஸ்.ஆர் .காங். -04

அசாம்

மொத்த தொகுதிகள்— 14
பாஜக கூட்டணி -11
இந்தியா கூட்டணி -03

சத்தீஷ்கர்

மொத்த தொகுதிகள்— 11
பாஜக -10
இந்தியா கூட்டணி -01

குஜராத்

மொத்த தொகுதிகள்— 26
பாஜக கூட்டணி -25
இந்தியா கூட்டணி -01

அரியானா

மொத்த தொகுதிகள்— 10
பாஜக கூட்டணி -05
இந்தியா கூட்டணி -05

இமாச்சலபிரதேசம்

மொத்த தொகுதிகள்— 04
பாஜக கூட்டணி -04

ஜம்மு-காஷ்மீர்

மொத்த தொகுதிகள்— 05
இந்தியா கூட்டணி -02
பாஜக கூட்டணி -02
மற்றவை -01

ஜார்கண்ட்

மொத்த தொகுதிகள்— 14
பாஜக கூட்டணி -09
இந்தியா கூட்டணி —05

கர்நாடகா

மொத்த தொகுதிகள்— 28
பாஜக கூட்டணி -19
இந்தியா கூட்டணி —09

கேரளா

மொத்த தொகுதிகள் –20
காங்கிரஸ் கூட்டணி -18
பாஜக -01
சிபிஎம் -01

மத்தியப்பிரதேசம்

மொத்த தொகுதிகள்— 29
பாஜக கூட்டணி -29
இந்தியா கூட்டணி -0

டெல்லி

மொத்த தொகுதிகள்— 7
பாஜக கூட்டணி -7
இந்தியா கூட்டணி -0

ஒடிசா

மொத்த தொகுதிகள்— 21
பாஜக கூட்டணி -19
இந்தியா கூட்டணி -01
பிஜு ஜனதா தளம் -01

பஞ்சாப்

மொத்த தொகுதிகள்— 13
இந்தியா கூட்டணி -10
பாஜக கூட்டணி -0
மற்றவை -03

ராஜஸ்தான்

மொத்த தொகுதிகள்— 25
பாஜக கூட்டணி -14
இந்தியா கூட்டணி -11

தெலுங்கானா

மொத்த தொகுதிகள்— 17
இந்தியா கூட்டணி -08
பாஜக கூட்டணி -08
ஒவைசி கட்சி 01

உத்தரகாண்ட்

மொத்த தொகுதிகள்— 5
பாஜக கூட்டணி -05

நிதீஷும், நாயுடுவும் ‘கிங் மேக்கர்கள்’

எந்தக் கட்சியும் தனிப்பெரும்பான்மை பெறாததால், அடுத்த பிரதமர் யார்? என்பதை தீர்மானிக்கும் ‘கிங்மேக்கர்’களாக, ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமாரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவும் உருவெடுத்துள்ளனர்.

தெலுங்கு தேசம் கட்சி 16 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 12 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

இந்த இரு கட்சிகளையும், தங்கள் பக்கம் இழுக்க ’இந்தியா’ கூட்டணி தலைவர்கள் தீவிர முயற்சி செய்து வருகிறார்கள்.

– மு.மாடக்கண்ணு

You might also like